இப்படியும் சர்ச்சை : திருநங்கைகளிடம் மன்னிப்பு கேட்பாரா விஜய்?

Published On:

| By christopher

Will Vijay apologize to transgenders

தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று (பிப்ரவரி 11) உருவாக்கப்பட்ட அணிகளின் பட்டியலில் இடம்பெற்ற ‘திருநங்கைகள்’ அணிக்கான வரிசை எண் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Will Vijay apologize to transgenders

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு அணிகள் குறித்த பட்டியல் விஜய் கையெழுத்துடன் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.

அதில் வழக்கத்திற்கு மாறாக சிறார் அணி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அணி, திருநங்கைகள் அணி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அதில் சர்ச்சையும் எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாக திருநங்கைகளை ‘9’ என இழித்து அழைத்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தான், அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக திருநங்கைகள் என அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பட்டியலில் இடம்பெற்ற திருநங்கைகள் அணி வரிசை எண் 9ஆம் இடத்தில் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Will Vijay apologize to transgenders

இதை படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா! Will Vijay apologize to transgenders

இது தொடர்பாக திருநங்கைகள் செயற்பாட்டாளர் Living Smile வித்யா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், “இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த “9” என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்? நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விசயம். ஆனால் அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன?

இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா! இதையும் நாங்களே தான் மாரிலும், வயித்திலும் அடித்து கேட்க வேண்டும். தமிழ்கூறும் அறிவுஜீவுகள் கொஞ்சம் சேர்ந்து நில்லுங்க ப்ளீஸ்” என்று வித்யா வேதனை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சமூகவலைதளங்களில் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share