தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக நேற்று (நவம்பர் 7) இரவு ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “ஸ்ரீரங்கம் மண்ணில் இருந்து பாஜக உறுதி எடுத்து கொள்கிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது முதல் வேலை அந்த சிலை அப்புறப்படுத்தப்படும். ஆழ்வார், நாயன்மார்கள் சிலைகள் வைக்கப்படும்.
தமிழ் புலவர்கள் சிலைகள், திருவள்ளுவர் சிலை வைக்கப்படும். சுதந்திரத்திற்கு பாடுபட்ட வீரர்கள் சிலைகள் வைக்கப்படும்.
கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்று சொல்லக்கூடிய சிலையை, பாஜக ஆட்சிக்கு வந்த முதல் நொடியில், தமிழகத்தில் உள்ள கோயில்கள் அருகில் வைத்துள்ள எல்லா சிலைகளையும் அகற்றி காட்டுவோம்.
அதுபோன்று இந்து அறநிலைத்துறை அமைச்சரவை இருக்காது. இந்து அறநிலையத்துறை என்ற அமைச்சகத்தின் கடைசி நாள், பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாளாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திமுகவை பொறுத்தவரை ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஒன்று சேர்ந்திருக்கும் நாடு இந்தநாடு. பெரியார் கொள்கைகள் ஏற்று கொள்ளப்பட வேண்டியவை,
இந்து மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்குமே தவிர, பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் என்பது தமிழகத்தில் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும், எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் கிடைக்காது. இது திராவிட மண்,
அண்ணாமலை போன்றவர்களுக்கு அதிகாரத்தில் கையெழுத்திடுகிற வாய்ப்பை தமிழக மக்கள் வழங்கமாட்டார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “முதலில் பெரியாருக்கு சிலை வைத்தவர்களும் நாங்கள் தான். வள்ளுவருக்கு சிலை வைத்தவர்களும் நாங்கள் தான். எங்கெல்லாம் பெரியார் சிலை இருக்கிறதோ, அதன் அருகே திருவள்ளுவர் சிலையும், எங்கெல்லாம் வள்ளுவர் சிலைகள் இருக்கிறதோ அதன் அருகே பெரியார் சிலையும் வைக்கப்படும்” என்று கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒரு தலைவரின் புகழ் போற்றப்பட வேண்டும். அதுதான் மாண்பு மரியாதை. அண்ணாமலை கூறியதால் அவர்களுக்குதான் பின்னடைவு” என்றவர், கடல் வத்தி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு, குடல் வத்தி செத்துச்சாம்” என பழமொழி கூறி கடுமையாக விமர்சித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தீபாவளி பண்டிகை: கோவை, மதுரையில் இருந்து சிறப்புப் பேருந்துகள்!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு!
Annamalai like late Raj Narain. Courtjester in Tamil Nadu politics.