சீமான் கைது செய்யப்படுவாரா என்பது தொடர்பாக அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். Will Seeman be arrested
பெரியார் குறித்து அவதூறாக பேசி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புகார் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் சீமான் போலீஸ் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில், பெரியார் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் சீமான் மீது திராவிடர் கழக கடலூர் மாவட்டச் செயலாளர் தண்டபாணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சீமானிடம் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நெய்வேலி டவுன் ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் இன்று காலை 7.45 மணியளவில் நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு சென்று அவரது கையிலேயே சம்மனை கொடுத்துள்ளார்.
அப்போது சீமானுக்கும் போலீஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மின்னம்பலத்தில் சம்மன்… போலீசிடம் சீமான் வாக்குவாதம்! என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
எத்தனை முறை வேண்டுமானாலும்… Will Seeman be arrested
இந்தநிலையில் இன்று (பிப்ரவரி 10) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம், சீமான் மீதான வழக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “ அவதூறு வழக்குகள் பதிவு செய்துவிட்டு நீதிமன்றத்திற்கு சென்று அங்கே வழக்கு தொடர்ந்து கொள்ளலாம். கைது செய்ய வேண்டும் என்பது கட்டாயம் அல்ல, கைது செய்யலாம் செய்யாமலும் விட்டுவிடலாம்.
ஆனால், நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜராகி குற்றவாளி அல்ல, அவதூறாகப் பேசவில்லை என்பதை அவர் நிரூபித்தாக வேண்டும். அவர் அவதூறாகப் பேசினார் என்பது வழக்கு பதிந்து இருக்கும்போது அவர் நீதிமன்றத்திற்கு வந்தாக வேண்டும்.
கைது செய்யவேண்டும் என்றால், எத்தனை முறை வேண்டுமானாலும் அவரை கைது செய்ய முடியும். எல்லா ஊர்களிலும் அவர் மீது புகார் கொடுக்கும் போது மொத்தத்தில் புகார்களாக அப்படியே உள்ளது. புகார் மீது விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அதன் மீது வழக்கு நடத்தப்படும். நீதிமன்றம் அதை பார்த்துக் கொள்ளும்” என்றார். Will Seeman be arrested