நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தான் முடிவெடுப்போம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை ஒட்டி இன்று (ஆகஸ்ட் 3) கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் வரிப்பணத்தை சுற்றுச்சூழலை கடல் வளத்தை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் திமுக அவரது தலைவருக்கு தனியாக ஒரு இடத்தில் கட்சியின் நிதியை வைத்து நினைவுச்சின்னம் அமைப்பதை தான் தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்
தொண்டர்களின் விசுவாசம் தான் ஒரு கட்சியின் அச்சாணி. என்னை கட்சியிலிருந்து நீக்கி ஆறு வருடம் ஆகிறது. நான் தனி கட்சி தொடங்கியும் ஆறு வருடம் ஆகிறது. முனுசாமி ஒரு பக்கம் உளறுகிறார். தர்மாகோல் விஞ்ஞானி செல்வராஜ் ஒரு பக்கம் பயத்தில் உலறுகிறார்கள்.
கொடநாடு கொலை வழக்கில் ஜெயக்குமார் பற்றி நாங்கள் ஏதாவது பேசினோமா? ஜெயக்குமார் எதற்கு சந்தில் சிந்து பாட வேண்டும்.
ஜெயகுமார் தான் கொடநாடு கொலை கொள்ளைக்கு காரணம் என்று நாங்கள் கூறினோமா? அப்படி இருக்கும் போது ஜெயக்குமார் எதற்கு எங்கள் கட்சி அச்சாணி குறித்து பேசுகிறார்.
தலையில் தொப்பி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர் ஆகிவிடுவாரா?, ஊழல் மூலமாக சம்பாதித்த பணத்தை வைத்துக் கட்சியை அபகரித்து வைத்துள்ளார்கள். சின்னம் இருக்கிறது என்ற திமிரில் இருக்கிறார்கள்.
நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்போம். அது காங்கிரஸ் கூட்டணியாக இருக்கலாம். இல்லை என்றால் பாஜக கூட்டணியாக கூட இருக்கலாம். அப்படி இல்லை என்றால் தனித்து கூட போட்டி இடலாம்” என்று தெரிவித்தார் டிடிவி தினகரன்.
முதல்வரை பாராட்டிய சி.ஆர்.சரஸ்வதி
900 கோடி ரூபாய் மதிப்பில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்!