பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியிடம் நீங்கள் ஏன் பாஜகவில் சேரக்கூடாது என்று கேட்டது” என்று செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதற்கு அமலாக்கத் துறை மறுப்புத் தெரிவித்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்றும் வாதிட்டது.
இந்த வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அல்லி கூறியிருந்தார்.
அதன்படி இன்று (செப்டம்பர் 20) தீர்ப்பு வழங்கிய நீதிபதி செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்தார்.
. “PMLA சட்டப்பிரிவு 45(1) இரட்டை நிபந்தனைகளை விதிக்கிறது.
அவை,
1. அரசு தரப்பின் கருத்தை அறியாமல் ஜாமீன் வழங்க முடியாது,
2. மனுதாரர் குற்றவாளி இல்லை என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கிறது என்று நீதிமன்றம் திருப்தி அடைய வேண்டும்.
இந்த காரணத்தை கூறி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுத்துள்ளார்.
பிரியா
அமைச்சர்கள் மீதான வழக்குகளிலிருந்து விலகமாட்டேன் : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
அதிமுக – பாஜக பிரச்சினை – ஒரே காமெடி : உதயநிதி பதில்!