கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
மத்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தும் குறிப்பிட்ட நபரை கண்காணிக்காதது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (அக்டோபர் 27 ) கேள்வி எழுப்பியுள்ளார்.
கார் வெடிப்பில் சிக்கி பலியான ஜமேசா முபினின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 75 கிலோ வெடிபொருட்களை கைப்பற்றினார். இந்த வெடிபொருட்களை வைத்து மிகப்பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற முபின் திட்டமிட்டிருப்பது அம்பலமாகி உள்ள நிலையில், இந்த வெடிபொருட்களை முபின் யார்-யாரிடமிருந்து எப்படி வாங்கினார் என்பது பற்றிய விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (அக்டோபர் 27 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழக அரசிற்கு இரண்டு கேள்விகள்,
அக்டோபர் 18, 2022 அன்று மத்திய புலனாய்வு அமைப்புகளால் தமிழக அரசுக்கு ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது ‘தற்கொலை குண்டுவெடிப்பு’ சம்பவத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு.
‘தற்கொலை குண்டுதாரி’ மற்றும் இப்போது இறந்த முபினின் (2019-ல் NIA இன் விசாரணைக்குப் பிறகு) நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறு தமிழ்நாடு மாநில உளவுத்துறை மற்றும் கோயம்புத்தூர் காவல்துறையிடம் கேட்கப்பட்டபோது, உள்ளூர் காவல்துறை முதலில் செய்து கொண்டிருந்தது, ஆனால் சிறிது நாட்களுக்கு பின்னர் அது நிறுத்தப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அது ஏன் நிறுத்தப்பட்டது . குறிப்பிட்ட’ நபர்களை கண்காணிக்காதது அரசியல் அழுத்தம் காரணமாகவா? என்றும் நமது முதல் அமைச்சர் இதற்கு பதில் சொல்வார? இல்லை வழக்கம் போல் அமைதியாக இருப்பாரா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சமந்தாவுக்காக சம்மதித்த ஐந்து ஹீரோக்கள்!
இரண்டு சத்தங்கள்: கோவை ஜமாத்தினரிடம் அதிகாரிகள் தெரிவித்த முக்கிய தகவல்!