பெண்களை அடிமைப்படுத்தியதுதான் சனாதனம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றிப் பேசியிருப்பது நாடு முழுவதும் புயலைக் கிளப்பியிருக்கிறது. “உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய போது மேடையில் வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தூத்துக்குடியில் இன்று (செப்டம்பர் 4) உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“என்ன தவறு செய்தார். அமைச்சர் சேகர்பாபு ஏன் பதவி விலக வேண்டும். சனாதனம் பற்றிப் பேசுகிறேன், பலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படும் என்று மேடையிலேயே சொன்னேன். அது நடந்துவிட்டது.
சனாதனம் என்பது நிலையானது, மாற்றம் செய்ய முடியாதது என்கிறார்கள். பெண்கள் வெளியே வரக்கூடாது என்றார்கள். ஆனால் வெளியே வந்தார்கள். திராவிடம் தான் பெண்களுக்குப் படிப்பை கொடுத்தது. புதுமைப் பெண் திட்டம் , காலை உணவுத் திட்டம் என பெண்களுக்காக முதல்வர் பல திட்டங்களைக் கொண்டு வந்தார்.
பெண்களை அடிமைப்படுத்தியது தான் சனாதனம். பெண்களை மேலாடை அணியக் கூடாது என்று சொன்னார்கள். கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏற வேண்டும் என்று சொன்னார்கள். இதெல்லாம்தான் சனாதனம். இதுபோன்றவற்றைதான் ஒழிக்க வேண்டும் என்று சொன்னேன்” என்று கூறினார்.
பிரியா
“முதல்ல இந்து அறநிலையத் துறையை மூடுங்க தம்பி” : தமிழிசை
காவல்துறையை இரண்டாக பிரிக்க வேண்டும்: அண்ணாமலை