why red giant movies buy kerala story

கேரளா ஸ்டோரி… ரெட் ஜெயிண்ட் ஏன் வாங்கணும்? அண்ணாமலை கேள்வி!

அரசியல்

தி கேரளா ஸ்டோரி படம் தவறு என்றால் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் அதை ஏன் வாங்கணும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியானது. மேற்கு வங்கத்தில் கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்திலும் படம் திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளா ஸ்டோரி படத்தை ரெட் ஜெயிண்ட் ஏன் வாங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (மே 12) செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்,

ஒரு புறம் கேரளா ஸ்டோரியை ஆதரிக்கிறீர்கள், மறுபக்கம் பிபிசி ஆவணப்படத்திற்குத் தடை விதித்துள்ளீர்கள். கருத்து சுதந்திரம் என்பது உங்களுக்கு ஆதரவான கருத்துக்களுக்கு மட்டும் தான் இருக்கிறதா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,

“கேரளா ஸ்டோரியை அரசு சார்ந்த நிறுவனம் தடை செய்தால் அது பற்றி எங்களுக்கு எந்த கருத்தும் இல்லை. மேற்குவங்கத்தில் கேரளா ஸ்டோரியை தடை செய்கிறோம் என்று அரசு முடிவெடுத்திருக்கிறார்கள்.

பிபிசி ஆவணப்படத்திற்கு உச்சநீதிமன்றம் சென்றது போல கேரளா ஸ்டோரி படத்திற்கும் உச்சநீதிமன்றம் சென்றார்கள். பாஜகவோ, காங்கிரஸோ, மம்தா பானர்ஜி அரசோ தடை செய்ய முடியாது.

தடை குறித்து நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவேளை மேற்கு வங்கத்தில் கேரளா ஸ்டோரி வரும் என்றால் நீதிமன்ற அனுமதியுடன் வெளியிடப்படும்.

நான் இன்னும் கேரளா ஸ்டோரி படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அந்த படத்தில் சொல்லி இருக்கக் கூடிய மைய கருத்து உண்மை. அதில் சொல்லி இருக்க கூடிய 32 ஆயிரம் என்ற எண்ணிக்கை சரியா என்பது எனக்கு தெரியவில்லை.

இதில் ஒரு மைய கருத்து இருக்கும் போது படத்தை பார்ப்பதில் என்ன தவறு.

கேரளா ஸ்டோரி தவறு என்றால் ஏன் ரெட் ஜெயிண்ட்ஸ் மூவிஸ் அந்த படத்தை வாங்கினார்கள்.

ரெட் ஜெயிண்ட்ஸு க்கும் உதயநிதிக்கும் தொடர்பு இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் தொடர்பு இருக்கிறது என்பதை நான் நீதிமன்றத்தில் நிரூபிக்கிறேன்” என்று பதிலளித்தார்.

மோனிஷா

யார் முதல்வர்? கர்நாடக காங்கிரசில் தொடங்கிய அதிகார யுத்தம்!  s

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை : 10 மணி நிலவரம்!

டிஜிட்டல் திண்ணை: ஆர். எஸ். எஸ். வீசிய வலை-உறுதி செய்த அண்ணாமலை: மீண்டும் நிதியமைச்சர்- பி டி ஆர் நம்பிக்கை!

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்: அண்ணாமலை ஆதரவு!

kerala story annamalai questions
+1
0
+1
1
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0