வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் ஏன் இருட்டா இருக்கு? என கேட்டு மன்சூர் அலிகான் இன்று (ஏப்ரல் 19) வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
நடிகர் மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். எனவே, இன்று (ஏப்ரல் 19) வேலூரில் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களை மன்சூர் அலிகான் நேரில் சென்று பார்வையிட்டார்.
பாலப்பழம் சின்னம் ஏன் இருட்டா இருக்கு? வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்#MansoorAliKhanpic.twitter.com/icvVcfClC1
— Tamil Diary (@TamildiaryIn) April 19, 2024
அப்போது வாக்குகள் பதிவாகும் சில இடங்களில் தான் போட்டியிடும்சின்னமான பலாப்பழ சின்னம் தெளிவாக தெரியவில்லை ரொம்பவே இருட்டாக இருக்கிறது என்று கூறி வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதைப்போல, தன்னுடைய சின்னம் தெரியாதவாறு, வாக்குகள் பதிவு செய்யும் இயந்திரங்கள் இருட்டில் உள்ளது வேறு இடத்திற்கு உடனே மாற்றுங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின், கொணவட்டம் பகுதியில் இருக்கும் உள்ள அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று அங்கு வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்டு தனது வாக்கை செலுத்தினார்.
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்சூர் அலிகான் நேற்று (ஏப்ரல் 18) டிஸ்சார்ஜ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: திருமா வலியுறுத்தல்!
ஈவிஎம்-ல் வேறு மென்பொருளை ஏற்ற முடியுமா?: முன்னாள் தேர்தல் ஆணையர் பேட்டி!