பிரஷாந்த் கிஷோர் எதற்காக இப்படி செய்கிறார்?: சீமான்

அரசியல்

நிதிஷ்குமாரால் முடியாததை நான் செய்ய வைத்துவிட்டேன் என்பதை காட்டுவதற்காக பிரஷாந்த் கிஷோர் இப்படி செய்துகொண்டிருக்கிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.

வடமாநிலத்தவர்கள் குறித்து பேசிய விவகாரத்தில்  திமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரஷாந்த் கிஷோர் ட்வீட் செய்ததைத் தொடர்ந்து சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக இன்று (மார்ச் 15) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரஷாந்த் கிஷோருக்கு முதலில் என் மாநிலத்தை பற்றி தெரியவேண்டும்.  காவிரியில் நதிநீர் கேட்கும் போது எங்களை அடித்து விரட்டி இந்திய நிலப்பரப்புக்குள்ளே அகதிகளாக  வரும் போது இவர் எங்கிருந்தார் என சொல்ல வேண்டும். 

முல்லை பெரியார் நதிநீருக்காக அடித்து விரட்டப்படும் போது, ஆந்திர காட்டுக்குள் 20 பேரை சுட்டு கொன்ற போது, தமிழக மீனவர்களை கைது செய்த போது இவர் ஏன் கண்டிக்கவில்லை. 

வடமாநிலத்தவர்கள்  தான் தமிழர்களை அடிக்கிறார்கள். ஆர்விஎஸ் கல்லூரியில் அடித்தது யார், கரூர் பேருந்து நிலையத்தில் அடித்தது யார்?  திருப்பூரில் ஒரு தொழிற்சாலையில் ஒருவரை துரத்தி துரத்தி அடித்தது யார்?. 

அவர் கட்சி தொடங்கி அரசியல் நடத்துவதற்காக பேசுகிறார். நிதிஷ் குமாரை  எதிர்க்க வேண்டும். நிதிஷ் குமாரால் முடியவில்லை, நான் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய வைத்துவிட்டேன் என்பதை காட்டுவதற்காக இப்படி செய்துகொண்டிருக்கிறார். 

தம்பி பிரஷாந்த் கிஷோர் நான் தமிழ் மக்களுக்கு உண்மையாக இருப்பேன். வடமாநிலத்தவர்கள் வருவதை பதிவு செய்து  முறைப்படுத்த வேண்டும். 

இங்கு ஏடிஎம்-ல் திருடிக்கொண்டு ஓடிவிட்டார்கள். ஹரியானாவுக்கு சென்று மூன்று பேரை பிடித்தார்கள். மற்றவர்களை பிடிக்க முடியவில்லை. ஏனென்றால் தரவு இல்லை. அவர்களை பற்றிய விவரமில்லை. 

வடமாநிலத்தவர்கள் வந்த பிறகு குற்றச் செயல்கள் கூடியிருக்கிறதா? இல்லையா?. அதிகமாக கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது. அது எல்லோருக்கும் தெரிகிறது. 

நான் போதிக்கும் போது புரியாது. பாதிக்கும் போதுதான் புரியும்.  அன்று நான் சொன்னது சரி என்பார்கள். அதுவரை நான் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். 

ஈரோடு கிழக்கில் நான் பேசும் போது, கஞ்சா வைத்திருந்தால் நான் அதிகாரத்துக்கு வந்தால் தூக்கி உள்ளே வைப்பேன், என் பிள்ளைகளை தொட்டால் வழக்குப்போடுவேன் என்று கூறினேன்.

இதை உடனே அவர் இந்தியில்  மொழிபெயர்த்து போட்டு, இவர்கள் என் மீது வழக்குப்போட்டு, வழக்கு போட்டுவிட்டோம் என ரீட்விட் போட்டு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

ஸ்டாலின் தான் முதல்வர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பீகார் பிரஷாந்த் கிஷோர் என்பது இப்போதுதான் தெரியவருகிறது” என்று குறிப்பிட்டார். 

சென்னையில் நடைபெற்ற ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் இவ்வாறு கூறினார். 

பிரியா

நாட்டு நாட்டு : ஆஸ்கரும் சர்ச்சையும்!

அதிமுக வட்டார கட்சியாக மாறிவிட்டது: டிடிவி தினகரன்

Why is Prashant Kishore doing this
+1
0
+1
1
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *