போலந்து நாட்டுக்கு இரு நாள் நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி கடந்த 21ஆம் தேதி சென்றார். 45 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, போலந்து வந்த இந்திய பிரதமருக்கு தலைநகர் வார்சாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்தார். போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டூடாவையும் பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார்.
போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் புறப்பட்டார். ரயில் மூலமாக உக்ரைனுக்கு சென்ற பிரதமர் மோடி, உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார். உக்ரைன் நாட்டு அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று, மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 1991ஆம் அண்டு உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி போலந்தில் இருந்து உக்ரைனுக்கு ட்ரெயின் ஃபோர்ஸ் ஓன் என்ற பெயர் கொண்ட ரயிலில்தான் சென்றார். உலகிலுள்ள மிகவும் சொகுசு ரயில்களில் இதுவும் ஒன்று. உக்ரைன் விமான நிலையங்கள் போர் காரணமாக மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால், ரயில் பயணம்தான் பாதுகாப்பானது என்பதால் கீவ் நகருக்கு சுமார் 20 மணி நேர பயண நேரத்தில் பிரதமர் மோடி ரயிலில் அழைத்து செல்லப்பட்டார்.
பிரதமர் மோடி மட்டுமல்ல இதற்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரான்ஸ், இத்தாலி பிரதமர்களும் இந்த ரயிலில்தான் கீவ் நகருக்கு சென்றுள்ளனர். இந்த ரயிலில் அதிநவீன பாதுகாப்பு வசதிகளும், சொகுசு ஹோட்டலில் உள்ள வசதிகளும் உண்டு. ரயில் இருந்த வசதிகளை பார்த்த பிரதமர் மோடி வியந்து போனார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஒலிம்பிக் தோல்விக்கு இப்படி ஒரு காரணம் சொல்லும் வீராங்கனையா? – மீராபாய் மீது பாயும் டாக்டர்
கற்றது தமிழ் படத்தை வாங்கி ரிலீஸ் செய்தேன், அந்த தைரியம் யாருக்கு வரும்? – கமலுடன் ஒப்பிட்ட கருணாஸ்