”செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்?”- அண்ணாமலை

அரசியல்

செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பது ஏன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(ஜூன் 30) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “செந்தில் பாலாஜி விவகாரத்தில் கடந்த இரண்டு வாரமாக முதல்வர், அவரை காப்பற்றுவதற்காக எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “ஆளுநர் செந்தில்பாலாஜியை டிஸ்மிஸ் செய்து இருந்தார், தமிழக முதல்வர் கடிதம் எழுதிய பின்னர் ஆளுநர் அதை நிறுத்தி வைத்துள்ளார்.

அமைச்சர் பதவியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கின்றதா என்பதற்குள் செல்ல பாஜக விரும்பவில்லை. அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு, மூன்று முறை கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தி இருக்கின்றார்.

ஆனால் இப்போது அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சொல்லுகிறார். வழக்கு இருக்கின்ற எல்லா அமைச்சர்களையும் நீக்க ஆளுநர் சொல்ல வில்லை. உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய வழக்கில் அமைச்சர் பதவியை பயன்படுத்துகின்றார் என்பதால் இந்த விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுத்தார்.

முதல்வர் அமைச்சரவையை சுத்தமாக வைத்துக்கொள்ள வில்லை. முதல்வர் இந்த விவகாரத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றார். ஆளுநர் எடுக்கும் முடிவுகள் சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். செந்தில் பாலாஜி மீது பாஜகவிற்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது, அவரின் குற்றங்கள் மீதுதான் வெறுப்பு”என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்தியா சம்பியன்!

“செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார்”: ஆளுநருக்கு முதல்வர் கடிதம்!

+1
0
+1
2
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0

1 thought on “”செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்?”- அண்ணாமலை

  1. அறிவில்லையா அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜியிடம் தோற்றவன் தானே அதன் பக்க விளைவு மத்திய அரசின் தனித்துவமான துறையை0 ஏவி விட்டு சுகம் காணும் சுய இன்பதாரர்கள் தானே…
    ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *