தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், தலைவர்களும் தங்களுக்குள் கட்சி வேறுபாடுகளை கடந்து பேசிக் கொள்வது வழக்கம். ஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சியின் தலைவரை பொதுவெளியில் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும். அரசியல் ரீதியாகவும் கவனிக்கப்படும்.
ஆனால் சட்டமன்றத்துக்குள் வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் சந்தித்து உரையாடிக் கொண்டால் கூட அது சட்டமன்றத்தில் இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றாகிவிடும்.
அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனிடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையைப் பற்றி பேச்சு வந்திருக்கிறது. “அண்ணாமலை ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறார்? கூட்டணி கட்சித் தலைவர்களை ஏன் இவ்வாறு பேசுகிறார்? ” என்று தனது கவலையை வானதி சீனிவாசனிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலும், ‘இதையெல்லாம் நீங்க மேலிடத்தோடு விவாதிப்பதுண்டா?” என்றும் கேட்டிருக்கிறார்.
எடப்பாடியின் இந்த கேள்விகளுக்கு சிரித்துக் கொண்டே சில பதில்களை சொல்லிவிட்டு சென்றாராம் வானதி சீனிவாசன்.
-வேந்தன்
தல தோனியை பார்க்க அரிய வாய்ப்பு…நுழைவு கட்டணம் இல்லை!
இறையன்புவுக்கு புதிய பதவி: ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் தாமதமா?