தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? அவரை யார் தடுக்கிறார்கள்? என மத்திய இணையமைச்சர் எல் முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 31) தீபாவளி திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து நாட்டின் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எனினும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கம்போல் தீபாவளி திருநாள் வாழ்த்துகளை சொல்லவில்லை.
இந்தநிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “நரகாசுரனை அழித்துவிட்டு கொண்டாட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். இதேபோன்று திமுக என்ற நரகாசுரனை 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டு, ஒரு சிறந்த தீபாவளியை நாம் கொண்டாடுவோம். நாம் அனைவரும் தயாராகுவோம்.
நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பயனாக நம்புவர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல உதயநிதி வாய் திறந்து இருக்கிறார். தீபாவளிக்கு இத்தனை நாட்களாக வாய் திறக்காதவர்கள், இன்று வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜயும் தீபாவளி வாழ்த்து சொல்லி இருக்கிறார்.
நாட்டு மக்களின் முதல்வராக இருக்கிறீர்கள். நாட்டில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம்? வாழ்த்து சொல்வதற்கு உங்களை யார் தடுக்கிறார்கள்? அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். நீங்கள் அனைவராலும் போற்றப்படுகிற தலைவராக இருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்” இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பேசாத திருமா…. ஒதுக்கப்பட்டாரா ஆதவ் அர்ஜுனா?
போயிங் 757 ல் வந்து இறங்கி குப்பை லாரியில் ஏறிய ட்ரம்ப்… வாயை வச்சுட்டு சும்மா இரு குரங்கு கதை!