காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும் ஏன் எம்.பி. ஆக்கப்படவில்லை என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடி சமுதாயம் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து உடனடியாக ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை ஆகஸ்ட் 4ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில் மீண்டும் ராகுல் காந்திக்கு எம்.பி. பதவியை கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மக்களவை செயலாளரிடம் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 6) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ராகுல் காந்தி மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் அவருக்கு ஏன் மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்படவில்லை? அவரை தகுதி நீக்கம் செய்ய காட்டிய ஆர்வம் இப்போது ஏன் காட்டப்படவில்லை? நாடாளுமன்றத்துக்கு ராகுல் காந்தியின் வருகையைக் கண்டு பாஜக அஞ்சுகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியா
இம்ரான் கானை அணுக முடியவில்லை : சட்டக்குழு!
”அதிமுக வாக்கு சதவிகிதம் இதுதான், ஈபிஎஸை வீழ்த்தாமல் ஓயமாட்டேன்” : டிடிவி சூளுரை!