’ரெட் ஜெயண்ட்’ என்று குறிப்பிட்டு சொல்ல பயம் ஏன்? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.
‘இரும்பன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 6 ) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் ”திரையுலகம் கார்ப்பரேட் மயமாகி வருகிறது. இங்கு பெரும் பணம் கொண்டு வருகிறார்கள்.
எல்லாவற்றையும் கார்ப்பரேட் மயம் ஆக்குவது ஆபத்தானது. கார்ப்பரேட் மயமாவதை தடுக்க போராட வேண்டியுள்ளது. முன்பு 30 லட்சத்தில் படம் எடுத்தார்கள். குறைந்த தொகையில் விநியோகம் செய்தார்கள்.
ஆனால், இப்போது அப்படியில்லை. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும்? திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகி கொண்டு இருக்கிறது. தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
யாருக்கு எதிராகவும் பேசவில்லை. எனக்கு சமூக பொறுப்பு உள்ளது என அவர் பேசியிருந்தார்.
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி இன்று (ஜனவரி 7 ) வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ரெட் ஜெயண்ட் ‘என்று குறிப்பிட்டு சொல்ல பயம் ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனால் பாஜக மற்றும் விசிக தொண்டர்கள் இடையே இணையத்தில் விவாதம் ஏற்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சாதிவாரி கணக்கெடுப்பு: பாராட்டிய ராமதாஸ்
உயிர்த்துளி: கதை இருக்கு நாயகி இல்லை!
Comments are closed.