விஜய் அதிமுகவை விமர்சிக்காதது ஏன்?: ஜெயக்குமார் பதில்!

அரசியல்

விஜய் அதிமுகவை விமர்சிக்காதது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 6) நடைபெற்றது.

அதன்பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

2026 தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் இருக்கிறது. தேர்தல் கூட்டணி தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்றார்.

அப்போது அவரிடம் திமுக கூட்டணி வலுவாக இல்லை என அதிமுக கூறுகிறது.ஆனால் திருமாவளவன் உள்ளிட்டோர் எங்கள் கூட்டணி உறுதியாக இருக்கிறது என கூறுகின்றனரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஜெயக்குமார், “கடந்த காலங்களில் உறுதியோடு சொன்னதெல்லாம் எப்படி மாறியிருக்கிறது என வரலாற்றை பாருங்கள். நாளை எப்படி இருக்கும் என்று இன்றைக்கு சொல்ல முடியாது.

எங்களை பொறுத்தவரை மெகா கூட்டணி அமைப்பதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. உரிய நேரத்தில் இதுகுறித்து அறிவிக்கப்படும்” என்றார்.

விஜய் மாநாட்டில் அதிமுகவை விமர்சிக்கவில்லை… அப்படியானால் அதிமுக – தவெக கூட்டணி அமையும் என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, “ஆட்சி சரியில்லை என்றாலோ, கட்சி சரியில்லை என்றாலோதான் விமர்சனங்கள் வரும்.

ஆனால் அதிமுக சிறப்பாக ஆட்சி செய்துள்ளது. சிறப்பான ஆட்சியை 31 ஆண்டு காலம் கொடுத்திருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது கட்சி சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கும்போது எப்படி விமர்சனங்கள் வரும்.

மக்கள் விரோத போக்க திமுக கடைபிடிக்கிறது. தென்மாவட்டத்தில் தலித் இளைஞர் வீடு புகுந்து தாக்கப்பட்டுள்ளார். தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை இருக்கிறது.

திமுக அரசை யார் பாராட்டுகிறார்கள். அப்பா மகனை பாராட்டுகிறார்.மகன் அப்பாவை பாராட்டுகிறார். இதுதான் நடக்கிறது. வேறு யாரும் திமுக அரசை பாராட்டவில்லை.

2026ல் திமுக படுதோல்வி அடையும் போது, அக்கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் எழும்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

டிரம்ப் வெற்றி: மோடி முதல் நெதன்யாகு வரை… உலக தலைவர்கள் வாழ்த்து!

இயக்குநர் சுசீந்திரனின் ‘2கே லவ் ஸ்டோரி’ : டீசர் நாளை வெளியீடு !

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *