பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (பிப்ரவரி 14) அக்கட்சியில் இணைந்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் ’25 வருடமாக கட்சிக்கு விசுவாசமாக இருந்தும் முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை’ என்று கூறி பாஜகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி. அதனையடுத்து கடந்த சில மாதங்களாக அரசியல் குறித்து அவர் எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்தார்.
இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் கவுதமி தன்னை இணைத்துக் கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கவுதமி பேசுகையில், “மக்கள் சேவை செய்ய அதிமுகவில் இணைந்துள்ளேன். மக்கள் சேவை செய்ய சரியான கட்சி அதிமுக.
என்னை பொறுத்தவரை களப்பணி என்று இறங்கினால் தொடர்ந்து தீவிரமாக செயல்படுவேன். அதனை அதிமுகவில் தொடர உள்ளேன். நான் களத்தில் இறங்கி வேலை செய்ய சரியான இடம் கிடைத்துள்ளது. அதிமுகவில் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணங்களை உரிய நேரம் வரும்போது விளக்கமாக கூறுவேன்.
ஜெயலலிதா என்னுடைய மனதில் ரொம்ப வருடமாக இருக்கிறார். அவருக்கு பிறகு ஈபிஎஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்” என்று கவுதமி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தடியடி.. கண்ணீர் புகை குண்டுகள்.. பரபரக்கும் களம் : விவசாயிகள் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டது ஏன்?
காதலர் தினம்: ஒவ்வொரு ‘கலர்’ ட்ரெஸ்க்கும் அர்த்தம் இதுதான்!
ஐபிஎல் 2024 தொடர் எங்கு நடைபெறும்?… சேர்மன் கொடுத்த அப்டேட்!