மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை சபரீசன் ஓடோடி சென்று பார்த்தது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று(ஜூன் 14) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தஞ்சாவூரில் இரண்டு பேர் அரசு விற்கும் மது பானத்தை வாங்கி குடித்து விட்டு இறந்துபோனார்கள். அவர்களின் உடற்கூறு ஆய்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே அவர்கள் சயனைடு சாப்பிட்டு இறந்து விட்டதாக காவல் துறை சொல்கிறது.
உலகத்திலேயே சயனைடு சாப்பிட்டுவிட்டு மூன்று மணி நேரத்திற்கு பிறகு இறந்து போனவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். அதை தொடர்ந்து மதுரை மேலூரில் இரண்டு பேர் டாஸ்மாக்கில் மது அருந்தி இறந்துள்ளனர்.
நேற்று மயிலாடுதுறையில் இரண்டு பேர் இறந்துள்ளனர். டாஸ்மாக் மதுவை அருந்தி உயிரிழந்தால் அதற்கு சயனைடு தான் காரணம் என்று கூறுகிறார்கள்.
தமிழகத்தில் இருக்கின்ற 6000 பார்களில் கிட்டத்தட்ட 2000 பார்கள் அனுமதியின்றி சட்ட விரோதமாக பார் நடத்திகொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி . அது அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதில் கிடைக்கும் பணம் நேரடியாக முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்திற்கு செல்கிறது. இது தொடர்பாக கவர்னர் இடத்தில் மனு கொடுத்தோம்.” என்றார்.
மேலும், முதல்வரின் மகன், மருமகன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை ஒடோடி சென்று பார்த்தது ஏன் ? என்று கேள்வி எழுப்பினார்.
”சுதந்திர போராட்ட வீரர்போல செந்தில் பாலாஜியை திமுகவினர் சித்தரிக்கின்றனர். செந்தில் பாலாஜி நாட்டுக்காக போராடியதுபோல் திமுகவினர் பேட்டி அளிக்கின்றனர்.
இன்றைக்கு செந்தில்பாலாஜியை பார்க்க வரும் இவர்கள் வருமானவரித்துறையினரால் அதிகாரிகள் தாக்கப்பட்ட போது எங்கே சென்றார்கள். காது குத்தும் விழாவா? தகவல் கொடுத்து விட்டா சோதனைக்கு வருவார்கள்?” என்றும் கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
செந்தில் பாலாஜி கைது: திமுக கூட்டணி கண்டன பொதுக்கூட்டம்!
செந்தில் பாலாஜி கைது: திமுக கூட்டணி கண்டன பொதுக்கூட்டம்!