பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு இன்று (அக்டோபர் 30) கருணாஸுடன் சென்ற நடிகர் விஷால் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று 117-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 62-ஆவது குரு பூஜை விழா ஆகும்.
இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் ராமநாதபுரம் பசும்பொன்னில் இருக்கும் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அக்கட்சியின் தலைவர் கருணாஸ் மலர்தூவி இன்று மதியம் 2 மணியளவில் மரியாதை செய்தார். அவருடன் நடிகர் விஷாலும் சென்று மரியாதை செய்தது பலரையும் உற்றுநோக்க செய்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில், “இந்தியாவின் சுதந்திரத்திற்காக பலர் போராடி உயிர் தியாகம் செய்துள்ளனர். எனினும் நினைவில் நிற்கக்கூடிய ஒருவர் தான் முத்துராமலிங்க தேவர்.
அவர் என்னை போன்ற சமூக சேவகர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார். இங்கிருந்து நான் கிளம்பும்போது, மக்களுக்காக இன்னும் சேவை செய்ய வேண்டும் என்ற தைரியம் வருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேவர் ஜெயந்தி கொண்டாடுவதற்காக இங்கு பலர் வந்துள்ளதை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ராணுவப்படைக்காக முதல் ஆளாக தமிழ்நாட்டில் இருந்து படையை அனுப்பியவர் முத்துராம லிங்க தேவர். அவர் ஆயிஷா என்ற பெண்ணிடம் தாய்ப்பால் குடித்தவர், கிறிஸ்துவ கல்லூரியில் படித்தவர். எல்லோரும் ஒன்றுதான், எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை கொண்டவர். ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்த அவர் தன் பணத்தில் மக்களுக்கு உதவி செய்தார். எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேசனாக உள்ளார். அப்படிப்பட்ட ஒருவரின் நினைவிடத்தில் மரியாதை செய்தது உற்சாகத்தை அளித்துள்ளது
எனக்கு அழைப்பு விடுத்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செய்ய வாய்ப்பளித்த கருணாஸுக்கு நன்றி. மக்களுக்கு செய்யும் சேவை தான் அரசியல். ஆனால் எந்த அரசியலுக்காகவும் நான் இங்கு வரவில்லை” என விஷால் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“சு.வெங்கடேசனையே கொடுக்க சொல்லுங்க” : அமைச்சர் மூர்த்தியின் பேச்சால் முற்றும் மோதல்!
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை….வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?