ரஜினியுடன் ஓ.பன்னீர் திடீர் சந்திப்பு ஏன்?

Published On:

| By christopher

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு தினம் இன்று (ஜனவரி 1) விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக புத்தாண்டு தினத்தன்று தலைவர்கள் சந்தித்துக்கொள்வதும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் பரிமாறி கொள்வதும் வழக்கம்.

இந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து பேசினார்.

ரஜினி நன்றாக உள்ளார்

பின்னர் அங்கிருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எனக்கு அண்ணன் ரஜினி மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் இருக்கிறது. அவரை மரியாதை நிமித்தமாகவே இன்று சந்தித்தேன். அவர் நன்றாக, திடகாத்திரமாக உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் போன்று இனி ஒருமுறை தமிழகத்தில் நடைபெற கூடாது. அதன் தார்மீக பொறுப்பு ஆளும் திமுக அரசுக்கு உண்டு” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ரஜினி புத்தாண்டு வாழ்த்து!

முன்னதாக இன்று காலை தனது எக்ஸ் தள பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்த புத்தாண்டு வாழ்த்து செய்தியில், “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் ரஜினியை சந்தித்துள்ளது அரசியல் தளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மந்த நிலையில் ‘பரோஸ்’ வசூல் : மோகன்லால் ரியாக்சன் என்ன?

அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பதா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share