மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று (ஏப்ரல் 7) ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்பி- யை. ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் நீங்கள் ஒரு சீட் வாங்கி இருக்கலாமே என்று என்னிடம் கேட்கிறார்கள். இந்த அவசரத்தில் அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நிற்பதற்கு இடம் வேண்டும் பிறகு உட்காருவதை பற்றி யோசிக்கலாம்.
இது நான் செய்த தியாகம் அல்ல. நம் அனைவரின் எதிர்காலத்திற்காக நான் போட்ட வியூகம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.34,000 கோடி கொடுக்க வேண்டும். மாநில அரசு ரூ.34,000 கோடி கொடுக்க வேண்டும்.
ஆனால் மத்திய அரசு அதன் தொகையை இதுவரை தரவில்லை. எனினும் மக்களின் நலன் கருதி ரூ.68 ஆயிரம் கோடியையும் மாநில அரசே ஏற்று அதன் பணிகளை தொடங்கி இருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் இளமை காலத்திலேயே சர்வாதிகாரத்தை எதிர்க்க தொடங்கி விட்டார். அப்போது அல்ல இப்போது வரை சர்வாதிகாரத்தை எதிர்த்து வருகிறார்.
இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் எனும் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் தான் முதலில் உரைத்தது என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. சொல்லலாம் ஆனால் செய்ய வேண்டும் அல்லவா.
அதை செய்ததற்காகவே நான் இங்கு இருக்கிறேன் என்றால் அது மிகையாகாது” எனக்கு கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஒன்னு ஜெயில் இல்லனா பெயில்… : எதிர்க்கட்சியினரை தாக்கிய ஜே.பி.நட்டா
மாநிலத்துக்கு எதிரான சட்டங்களை அதிமுக எதிர்க்காதது ஏன்? : எடப்பாடி ஓபன் டாக்!