கோவைத் தொகுதியை சிபிஎம் விட்டுக்கொடுத்தது ஏன்?

Published On:

| By Kavi

Why did CPM give up Coimbatore in mp election

Why did CPM give up Coimbatore in mp election

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுக் கடந்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தச்சூழலில் சிபிஎம் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்படுவது தொடர்பாக ஆலோசனை நடந்து வந்தது. இன்று (மார்ச் 12) அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினர்.

கடந்த தேர்தலில் மதுரை, கோவை தேர்தலில் சிபிஎம் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இந்த தேர்தலில் கோவையை விட்டுக்கொடுத்துள்ளது சிபிஎம்.

கோவைக்குப் பதில் திண்டுக்கல்லில் போட்டியிடவுள்ளது. தொகுதியை விட்டுக்கொடுத்தது தொடர்பாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கே.பாலகிருஷ்ணன்,

“இந்த இரண்டு தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். பேச்சுவார்த்தை என்று வரும் போது எங்களுடைய சிட்டிங் சீட்டை விட்டுக்கொடுத்துள்ளோம். அவர்களுடைய சிட்டிங் சீட்டை எங்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளனர்.

பரஸ்பரமாக ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துள்ளோம். காலம் காலமாக இரண்டு இடங்களில் போட்டியிட்டு வருகிறோம்.

கடந்த காலங்களிலும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டிருக்கிறோம். பேச்சுவார்த்தையில் பல கட்சிகளோடு தொகுதிகளைப் பங்கிட வேண்டு என்ற அவசியமிருக்கிறது. அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தையில் சுமுகமாக முடிவு ஏற்பட்டது” என கூறினார்.

1971 முதல் 2019 வரை நடந்த 13 தேர்தல்களில் திண்டுக்கல் தொகுதியில் திமுக 3 முறை வெற்றி பெற்றிருக்கிறது. இதில் 1980 தேர்தலுக்கு பிறகு திமுக இந்த தொகுதியில் நேரிடையாக களமிறங்கி வெற்றிகாணவில்லை.

பின்னர், இந்த தொகுதியில் 2019ல் போட்டியிட்டு திமுக வெற்றி பெற்ற நிலையில், அந்த தொகுதியை சிபிஎம் கட்சிக்கு கொடுத்துள்ளது.

கோவை தொகுதியைப் பொறுத்தவரை 1971 முதல் 2019 வரை நடந்த 13 தேர்தலில் இடதுசாரிகள் 5 முறை வெற்றி பெற்றுள்ளன. இதில் சிபிஎம் 2009, 2019 ஆகிய இரு தேர்தலில் வெற்றிபெற்றது. திமுக இரண்டு முறையும், காங்கிரஸ் மூன்று முறையும், பாஜக இரண்டு முறையும், அதிமுக ஒருமுறையும், சிபிஐ மூன்று முறையும்  வெற்றி பெற்றுள்ளன.

இதில் கடந்த தேர்தலில் சிபிஎம் 45.66 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்நிலையில், கோவை தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

Thalapathy விஜய் படத்தில் இணைந்த இசைஞானி?

சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்

Why did CPM give up Coimbatore in mp election

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment