தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சொந்த நடைமுறையை வகுத்துக் கொண்டதாக தெரிகிறது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. Whom does the Governor consult
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் ஆளுநர் இடையூறு செய்வதாகவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இருமனுக்களை தாக்கல் செய்தது.
இந்த மனுவை நீதிபதிகள் பரிதிவாலா மற்றும் மகாதேவன் அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுடன் பேசி முடிவெடுக்குமாறு ஆளுநருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
பழைய வரலாறு தேவையில்லை!

Whom does the Governor consult
இந்த நிலையில் இவ்வழக்கு இன்று(பிப்ரவரி 6) விசாரணைக்கு வந்தபோது ஆளுநர் மற்றும் மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜராகி வாதாடினார்.
“ஆளுநர் பதவியே தேவையில்லை என்ற வாதங்கள் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசியல் சாசன பிரிவு 200, 201 இருக்கும் வரை ஆளுநரின் பதவியை அகற்ற முடியாது” என்று ஆளுநர் தரப்பு வாதத்தை முன்வைத்தது.
அப்போது நீதிபதிகள், “எங்களுக்கு பழைய வரலாறு எல்லாம் தேவையில்லை. இந்த விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கைக்கான நியாயமான காரணங்களை மட்டுமே எதிர்பார்க்கிறோம்” என்று கூறினர்
“கடந்த 2023 நவம்பர் மாதம் பஞ்சாப் அரசுக்கும் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையேயான மோதல் போக்கு குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டபோதும், ஆளுநரின் செயல்பாடுகள் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உடன்படாதது போல் இருந்துள்ளது” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
“ஆளுநரின் அதிகாரத்தை நாங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களை நிறுத்தி வைத்திருக்கிறார். இரண்டு மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். எனவே நான் ஒப்புதல் அளிக்கவில்லை என்று நேரடியாக கூறும் ஆளுநரின் அதிகாரத்தைதான் நாம் ஆராய்ந்து வருகிறோம். அவ்வாறு அவர் செய்ததற்கு மசோதாக்களில் என்ன பிரச்சினை இருந்தது என்பதை நீங்கள் சொல்ல வேண்டும். குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, “மத்திய அரசின் வரம்புக்குள் இருக்கும் ஒரு விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்றுகிறது என்றால் அதை நிராகரிக்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் மாநில பட்டியலில் இருக்கும் ஒரு விவகாரத்துக்காக அரசு மசோதாவை நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்” என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், “ஒரு மசோதாவை திருப்பி அனுப்பும் போது அதற்கான காரணத்தை சொல்லாமல் அனுப்ப முடியுமா? அப்படி அனுப்பினால் மாநில அரசு அதை எப்படி சரி செய்து கொள்ளும்?” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு தமிழக அரசு சார்பில், “காரணம் எதுவும் சொல்வதில்லை. வெறுமனே அதை நிலுவையில் போட்டு வைப்பார். இல்லையென்றால் காரணம் இல்லாமல் நிராகரித்து விடுவார்” என்று வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “என்னென்ன காரணங்களை குறிப்பிட்டு ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்ப முடியும்?” என்று மீண்டும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழக அரசு தரப்பில், “குறிப்பிட்ட சரத்துகளை சுட்டிக்காட்டி அதை மாற்ற அறிவுறுத்தலாம். சட்ட வரைமுறைக்கு எதிராக இருந்தால் அதை சுட்டிக் காட்டலாம். சில பரிந்துரைகளை கொடுக்கலாம். இந்த மூன்றை தவிர ஆளுநரால் வேறு எதுவும் செய்ய முடியும்” என்று பதிலளிக்கப்பட்டது.
அப்போது ஆளுநர் தரப்பில், “ஒரு மசோதாவை நிராகரித்தாலோ அல்லது திருப்பி அனுப்பினாலோ, அதற்கான காரணத்தை தெளிவாக சுட்டிக்காட்ட வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால் கட்டாயமாக அதை பின்பற்ற வேண்டும் என்பதில்லை” என்று வாதிடப்பட்டது.
தமிழக அரசு தரப்பில், “சட்டம் இயற்றும் இடம் சட்டமன்றம் தான். ஆளுநர் மாளிகை கிடையாது. சட்டமன்றத்தில் அலசி ஆராய்ந்து மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. எந்த ஒரு அரசும் மசோதா நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்காது. எனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களை எந்த விளக்கங்களும் கொடுக்காமல் நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல.
ஆளுநர் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சரவை குழுவின் அறிவுரைகளின் படி தான் எடுக்க முடியும்” என்று தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நாளை ஒத்திவைப்பு! Whom does the Governor consult
இதையடுத்து நீதிபதிகள், “ஆளுநர் இரண்டு மசோதாக்களை முதல் தடவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். 10 மசோதாக்களை திருப்பி அனுப்பி விட்டு மீண்டும், அவருக்கு அனுப்பும் போது ஒப்புதல் அளிக்க வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு அதை செய்யாமல் குடியரசு தலைவருக்கு ஏன் அனுப்பி வைத்திருக்கிறார்? எந்த அடிப்படையில் யார் யாரிடம் ஆலோசனை செய்து யாருடைய அறிவுரையின்படி ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார்? என மீண்டும் மீண்டும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது ஆளுநர் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறோம் என்று கூறப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு நாளை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர். Whom does the Governor consult