ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதா அல்லது கூட்டணி கட்சி போட்டியிடுமா என்பதை எடப்பாடி பழனிச்சாமி ஓரிரு நாளில் அறிவிப்பார் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை பொருத்தவரையிலும் அதிமுக களம் காணுகிற தேர்தலாக அமைகிறது.
கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணியை பற்றி விரைவில் முடிவு செய்வார்.
நாளை மாலை அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் பூத் கமிட்டி மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் தனியார் மன்றத்தில் நடைபெறுகிறது.
மக்கள் மனம் மாறி இருக்கிறார்கள். மக்களின் மனமாற்றத்திற்கு காரணமாக அதிமுக கூட்டணி ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றி பெறும்.
கடந்த முறை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தாலும், இந்த முறை யார் போட்டியிடுவது என்பதை கழகத்தின் பொதுச் செயலாளரும்,கூட்டணி கட்சி தலைவர்களும் தான் முடிவு செய்வார்கள்,
அதில் என்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது. எங்களை பொறுத்தவரை கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார். அந்த கூட்டணி ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றே தீரும் என்றார்.
இந்தநிலையில் ஈரோடு கிழக்கு – இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் அதிமுக- தமாக நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் ஜி.கே.வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார் , வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் சந்தித்துப் பேசி வருகின்றனர்.
கலை.ரா
வாரிசு துணிவு: தவறான வசூல் தகவலும் திருப்பூர் சுப்பிரமணி பதிலும்!
வடிவேலுவுக்கு முதல்வர் சொன்ன ஆறுதல்!