துணை முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவ்வா? அமுதாவா? கோட்டை ரேஸ்!

அரசியல்

தமிழ்நாடு அரசின் துணை முதல்வராக உதயநிதி செப்டம்பர் 28 ஆம் தேதி இரவு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதியின் செயலாளர் யார் என்ற கேள்வி அதிகாரிகள் வட்டாரங்களில் தீவிரமாக எழுந்துள்ளது.,

இதுகுறித்து கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், ’உதயநிதியின் செயலாளர் யார்? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குள் போட்டி’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அந்த செய்தியில், “உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்ட பிறகு அவரது செயலாளராக வரப் போவது யார் என்ற போட்டி  ஐஏஎஸ் அதிகாரிகள் இடையே  தீவிரமாகியிருக்கிறது. அடுத்த இரண்டரை வருடங்களில் மிகவும் சக்தி வாய்ந்த பதவிகளில் ஒன்றாக இருக்கப் போவது துணை முதல்வரின் செயலாளர் பதவி.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக இருக்கிற சாய்குமார் ஐ.ஏ.எஸ்., உயர் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்,  அமைச்சர் உதயநிதியின் தற்போதைய துறையான விளையாட்டுத் துறை செயலாளராக இருக்கும்  அதுல்ய  மிஸ்ரா ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளின் பெயர்கள் துணை முதல்வரின் செயலாளர் பதவி ரேஸில் இருக்கின்றன. மேலும், சில அதிகாரிகளும் இந்த பதவிக்காக லாபி செய்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில், கோட்டை வட்டாரத்தில் இன்று விசாரித்தபோது, “ அதுல்ய மிஸ்ராவை துணை முதல்வரின் செயலாளராக நியமிக்க முதல்வருக்கு விருப்பமில்லை என்று ஒரு தகவல் வருகிறது. அதேநேரம் பிரதீப் யாதவ் பெயர் தான் துணை முதல்வரின் செயலாளர் பதவிக்கு தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

ஆனால், முதல்வருக்கு நெருக்கமான சில அதிகாரிகள் திடீரென முன்னாள் உள்துறைச் செயலாளரும், இப்போதைய பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளருமான அமுதாவை துணை முதல்வரின் செயலாளராக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். ஐ.ஏ..எஸ், அதிகாரிகளுக்கு இடையிலான இந்த லாபிதான் இப்போது கோட்டையில் ஹாட்” என்கிறார்கள்.

வேந்தன்

12 மாவட்டங்களில் மழை : வானிலை அப்டேட்!

திருப்பதி லட்டுவில் கலப்படம் – ஆதாரம் இருக்கிறதா?: சந்திரபாபுவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *