நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸும், மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றன. இதில் தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று (டிசம்பர் 7) பதவியேற்றுள்ளார். மிசோரம் மாநிலத்தின் முதல்வராக லால்டுஹோமா இன்று (டிசம்பர் 8) பதவியேற்க உள்ளார்.
ஆனால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களை பொறுத்தவரை அந்த மாநிலங்களின் அடுத்த முதல்வர் யார்? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
ஏனெனில் மேற்கண்ட மாநிலங்களை பொறுத்தவரை அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை அடையாளம் காட்டாமலேயே பாஜக தேர்தலை எதிர்கொண்டது. தற்போது தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றபோதும் அது சஸ்பென்ஸ் ஆகவே நீடிக்கிறது.
இந்த நிலையில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா,” வருகின்ற ஞாயிறுக்குள் (டிசம்பர் 10) மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் அடுத்த முதல்வர் யார்? என்பதை கட்சித்தலைமை முடிவு செய்து விடும்.
மூன்று மாநிலங்களிலும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு பிரதமர் மோடியின் மேஜிக்கே காரணம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி நிச்சயம் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்,” என தெரிவித்து உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த முதல்வராக வசுந்தரா ராஜே சிந்தியாவும், மத்திய பிரதேசத்தின் முதல்வராக சவுராஜ் சிங் சவுகானும் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சத்தீஸ்கரை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் ராமன் சிங், சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஜக முன்னாள் தலைவர் விஷ்ணு தேவ் சாய், மத்திய அமைச்சர் ரேணுகா சிங் ஆகிய மூவரில் ஒருவர் அடுத்த முதல்வர் ஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களில் யாரை பாஜக அடுத்த முதல்வராக அறிவிக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்
புயல் நிவாரண நிதியாக ஒரு மாத ஊதியம் வழங்கிய முதல்வர்: எவ்வளவு தெரியுமா?
“கண் பார்வையை இழந்துவிட்டேன்”: டிவில்லியர்ஸ் அதிர்ச்சி தகவல்