முத்துராமலிங்கர் தங்கக்கவசம் யாருக்கு?: எடப்பாடி -பன்னீர் மோதல்!

அரசியல்

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் ஜெயலலிதா வழங்கிய தங்கக்கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 3.7 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார்.

மதுரை அண்ணாநகரில் உள்ள மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் அந்தக் கவசம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Who got Muthuramalingar gold armor ops eps conflict

அதிமுகவின் பொருளாளர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம்  ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின் போது,

வங்கிக்கு நேரில் வந்து கவசத்தை பெற்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் பெற்று வங்கியில் ஒப்படைப்பது வழக்கம்.

அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தங்கக் கவசத்ததை யாரிடம் வழங்குவது என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. பொருளாளர் யார் என்பதிலேயே குழப்பம்.

Who got Muthuramalingar gold armor ops eps conflict

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இடையே பிரச்சினை எழுந்த நிலையில், பன்னீரை பொருளாளர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, திண்டுக்கல் சீனிவாசனை அந்த இடத்திற்கு நியமித்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நியமனமே செல்லாது, நான் தான் பொருளாளர் என்று சொல்லி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்த பிரச்சினை இப்படி இருக்க, கடந்த வாரம் மதுரை அண்ணாநகர் வங்கி நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வ கடிதம் வழங்கி, தான் அதிமுக பொருளாளர் என்ற முறையில் தங்க கவசத்தை தன்னிடம் வழங்கவேண்டும் என்று கடிதம் அளித்திருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்.

வங்கிக்கு நேரில் சென்ற அவர் தேவர் தங்க கவசத்திற்கு உரிமை கோருவதற்கான அலுவல் நடைமுறையை மேற்கொண்டார்.

அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோரும் சென்றனர்.

இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான தர்மர் எம்பி, ஜயப்பன் எம்.எல்.ஏ , மதுரை மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் இன்று (அக்டோபர் 3)வங்கிக்கு நேரில் சென்று தங்க கவசத்திற்கு உரிமை கோரி கடிதம் அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எங்கள் தரப்பின் சார்பில் வழக்கம் போல ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு தங்க கவசத்தை பெறுவதற்கான கோப்புகளை வங்கி அதிகாரியிடம் வழங்கினோம்.

வங்கி அதிகாரிகள் எதிர் தரப்பில் இருந்தும் கோப்புகள் வழங்கப்பட்டுள்ளது என கூறினர்.

இரண்டையும் பரிசீலித்து அவர்கள் முடிவை எடுப்பார்கள். எங்கள் தரப்பிற்கே தங்கக்கவசம் கிடைக்கும் என நம்புகிறோம்.

Who got Muthuramalingar gold armor ops eps conflict

எப்பொழுதும் போல இந்த ஆண்டும் ஓ.பன்னீர்செல்வம் வங்கியில் இருந்து தங்க கவசத்தை பெற்று தெய்வத்திருமகனாருக்கு அளிப்பார். தர்மம் வெல்லும் என்று கூறினர்.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பொருளாளராக நீடிக்கிறாரா, இல்லையா என்பது அக்கட்சி தொண்டர்களுக்கே உள்ள குழப்பம்.

இந்தநிலையில் பொருளாளரிடமே முத்துராமலிங்கத் தேவரின் தங்கக்கவசம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று ஜெயலலிதா வழிவகை செய்திருப்பதால், அந்தக் கவசத்தை பெறுபவரே பொருளாளர் என்று கருதப்படுவர்.

அப்படி இல்லை என்றால் 2017 ஆம் ஆண்டும் கட்சியில் ஏற்பட்ட பிரச்சினையின்போது மாவட்ட ஆட்சியரிடம் தங்கக்கவசம் ஒப்படைக்கப்பட்டு தேவருக்கு அணிவிக்கப்பட்டது. அதே நடைமுறையை வங்கி நிர்வாகம் தற்போதும் பின்பற்றலாம் என்றும் சொல்லப்படுகிறது.

கலை.ரா

ஆட்டநாயகன் விருது சூர்யகுமாருக்கு தான் கொடுத்திருக்கனும்: கே.எல்.ராகுல்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *