who bought highest electoral bonds

இந்தியாவிலேயே தேர்தல் பத்திரங்களை அதிகமாக வாங்கிய நிறுவனங்கள் எவை தெரியுமா?

அரசியல்

இந்தியாவிலேயே அதிகமாக தேர்தல் பத்திரங்களை வாங்கியது கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான Future Gaming and Hotel Services நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1368 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் மொத்தமாக 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1368 பத்திரங்களை வாங்கியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை மார்ச் 15 ஆம் தேதிக்குள்ளாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து இன்று அந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்கள் ஒரு தொகுப்பாகவும், தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றிய கட்சிகளின் விவரங்கள் மற்றொரு தொகுப்பாகவும் வெளியாகியுள்ளது. தேர்தல் பத்திரங்களைப் பொறுத்தவரை பாதிக்கும் மேலாக பெரும்பான்மையான நிதியை பாஜகவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பத்திரங்களை அதிகமாக வாங்கி இரண்டாவது இடத்தில் இருப்பது ஹைதராபாத்தைச் சேர்ந்த Megha Group of Companies நிறுவனங்களாகும். இக்குழுமம் 1186 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கியுள்ளது. அதில் குறிப்பாக Megha Engineering & Infrastructures Limited நிறுவனம் 966 கோடி ரூபாய்க்கும், Western UP Power transmission company ltd 220 கோடி ரூபாய்க்கும் பத்திரங்களை வாங்கியுள்ளது.

மகாராஷ்டிராவை மையப்படுத்திய Qwik Supply Chain நிறுவனம் 410 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான தபாஸ் மித்ரா ரிலையன்ஸ் ஆயில் மற்றும் பெட்ரோலியம் உள்ளிட்ட பல்வேறு ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் இயக்குநராகவும் இருக்கிறார்.

சஞ்சீவ் கோயங்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான Haldia Energy Ltd நிறுவனம் 395 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது.

வேதாந்தா நிறுவனம் 386 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேதாந்தா, பாரதி ஏர்டெல், ராம்கோ, முத்தூட் : தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

பெட்ரோல் டீசல் விலை ரூ.2 குறைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “இந்தியாவிலேயே தேர்தல் பத்திரங்களை அதிகமாக வாங்கிய நிறுவனங்கள் எவை தெரியுமா?

  1. {இந்தியாவிலேயே தேர்தல் பத்திரங்களை அதிகமாக வாங்கிய நிறுவனங்கள் யார் தெரியுமா?}
    ‘நிறுவனங்கள்’ அஃறிணை. இதைக் குறிப்பிட ‘யார்’ என்னும் உயர்திணையைப் பயன்படுத்தக் கூடாது.
    ‘எவை தெரியுமா?’ என்றே எழுதவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *