கர்நாடகா பாஜகவில் நாங்கள் தலையிடலாமா? சி.டி. ரவிக்கு எடப்பாடி தரப்பு கேள்வி!

அரசியல்

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி பிரச்சார களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர் செல்வம் அணியும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 3 ) காலையில் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் சி.டி. ரவி ஆகியோர் சந்தித்தனர்.

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்ஸை இணைக்க பாஜக முயற்சிப்பதாக அப்போது செய்திகள் வந்தன.

இதையடுத்து பேசிய சி.டி. ரவி, அதிமுக உருவாகும் போது அதனை உருவாக்கிய எம்ஜிஆர் திமுகவை ஒரு தீய சக்தி என குறிப்பிட்டார். அது தற்போது வரை அதே நிலையில் தான் உள்ளது ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று தான் குற்றம்சாட்டினார்.

மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, திமுக அமைச்சர்கள், எம்.பி.க்களால், மூத்த தலைவர்களால் தமிழ் கலாச்சாரம் மீது தொடர் தாக்குதல் நடைபெறுகிறது. ஆகையால் தான் இந்த தீய சக்தியை இடைத்தேர்தலில் தோற்கடிக்க ஒன்றுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, ஒன்றுபட்ட அதிமுக கட்டாயம் தேவை என்று பேசினார்.

அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணையவேண்டும் என்று கூறிய சி.டி.ரவியின் கருத்தை அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கடுமையாக சாடி உள்ளார்.

சி.டி.ரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவர் இன்று (பிப்ரவரி 3 ) வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு சி.டி.ரவி யார்? நீங்கள் ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் என்ன வேண்டுமானாலும் கூறலாமா?

இதேபோல் கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா? திமுகவை எதிர்த்து ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறுவதா? என்று கடுமையாக சாடியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

எனது மகன் பணியை தொடர்வேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஷாருக்கான் – டாம் குரூஸ் ஒப்பீடு : அமெரிக்கா எழுத்தாளரை வச்சு செய்த ரசிகர்கள்!

+1
0
+1
3
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0