பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யார் யார்?

Published On:

| By Kavi

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.ஆகியோர் டெல்லியில் இன்று (பிப்ரவரி 7) பாஜகவில் இணைந்தனர்.

டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர்கள் எல்.முருகன், ராஜீவ் சந்திரசேகர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில்,

கரூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.வடிவேல்,

கோயம்புத்தூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரைசாமி

பொள்ளாச்சி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.ரத்தினம்

சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சின்னசாமி,

அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.கந்தசாமி

தேனி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.ஜெயராமன்

வலங்கைமான் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் தமிழக அமைச்சர் கோமதி சீனிவாசன்

வேடசந்தூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் . எஸ்.எம்.வாசன்

ஆண்டிமடம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.தங்கராஜ்

புவனகிரி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.அருள்

பாளையங்கோட்டை தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குருநாதன்

காங்கேயம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வி முருகேசன்

திட்டக்குடி தொகுதி முன்னாள் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழழகன்

காட்டுமன்னார் கோவில் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன்

கொளத்தூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ரோகிணி

மற்றும், முன்னாள் சிதம்பரம் திமுக பாராளுமன்ற உறுப்பினர் குழந்தைவேலு ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.


இவர்கள், மக்கள் நலன் சார்ந்த நேர்மையான தேசியக் கண்ணோட்டத்தில் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

Rose day: காதலி மனதில் இடம்பிடிக்க எந்த நிற ரோஜா கொடுக்கலாம்?

அதிமுகவுடன் கூட்டணியா?: அன்புமணி பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel