தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று (மே 23) சிங்கப்பூர் புறப்பட்ட முதல்வருடன் பயணம் செய்தவர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும், அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், முதல்வர் மு.க ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்.
அதற்காக இன்று காலை 11.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா 346 விமானம் மூலம் அவர் சிங்கப்பூருக்கு புறப்பட்டார்.
முதல்வருடன் இந்த வெளிநாட்டுப் பயணத்தில், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, முதல்வரின் செயலாளர்கள் உமாநாத் மற்றும் அனு ஜார்ஜ், தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், செய்தித்துறை இயக்குநர் மோகன், முதல்வரின் உதவியாளர் தினேஷ் குமார், முதல்வர் பாதுகாப்பு அதிகாரிகள் நாகராஜ் மற்றும் செல்வராஜ் ஆகியோர் செல்கின்றனர்.
முன்னதாக சிங்கப்பூர் சென்ற முதல்வருக்கு தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
அதில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி கே.என்.நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், மூர்த்தி போன்றோரும்,
எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராஜா, கதிரானந்த், அப்துல்லா, தயாநிதி மாறன், ஏ.கே.எஸ். விஜயன் போன்றோரும்,
எம்எல்ஏக்கள் எஸ்.ஆர். ராஜா, இ.கருணாநிதி, பரந்தாமன், தாயகம் கவி, ஆவடி நாசர், வி.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோரும், சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.
இவர்களில் அமைச்சர்கள் உதயநிதிஸ்டாலின் மற்றும் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாட்கள் பயணம் ஏன்?: முதல்வர் விளக்கம்!
’சவால் விடும் காட்சி சிறப்பாக வர சரத்பாபுவே காரணம்’: உண்மையை பகிர்ந்து ரஜினி உருக்கம்!