“காவி இருக்கும் இடத்தில் இருந்தால்தான் நல்லது”: செல்லூர் ராஜூ காட்டம்!

அரசியல்

காவி இருக்கவேண்டிய இடத்தில்தான் இருக்கும், எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவிக் கொடியை போர்த்தி அவமானப்படுத்தியவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று செல்லூர் ராஜூ காட்டமாகக் கூறினார்.

மதுரை மேற்கு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ பரவை பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவிக் கொடியை போர்த்தி அவமானப்படுத்தியவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். காவி இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால்தான் நல்லது.

எம்.ஜி.ஆர் சமூக நீதித்தலைவர், அவர் சிலை மீது காவிக்கொடியை போட்டவன் இழி பிறவி என்பேன். அவன் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது செல்லூர் ராஜூவிடம், தி.மு.க., அரசு மேற்கொள்ள உள்ள கொரோனா முன்னெச்சரிக்கை பணி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், எங்களுடைய ஆட்சி காலத்திலேயே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிட்டோம். தற்போது கட்டிய வீட்டில் தி.மு.க., அரசு குடியேறியுள்ளது என்றார்.

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் எடப்பாடி பழனிசாமி  பங்கேற்பாரா என்று கேட்டபோது, ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு பின்னர் இது குறித்து தெரியவரும். சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லை என்றால் பங்கேற்பார் என்று பதிலளித்தார்.

அ.தி.மு.க. குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்த கருத்து பற்றி செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அ.தி.மு.க., தொண்டர்களை யாராலும் பணம் கொடுத்து வாங்க முடியாது. அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்று அவர் கூறினார்.

அ.தி.மு.க. மற்றும் ஓ.பி.எஸ்., குறித்த கேள்விகளை தவிர்த்த செல்லூர் ராஜூ, தற்போதை ஆட்சியில் என்ன நடக்கிறது. மக்களுக்கு என்ன தேவை என்ற கேள்வியை முன் வையுங்கள் என்றார்.

கலைஞர் கதை வசனம் எழுதினார், ஸ்டாலின் நன்றாக பேசுகிறார். ஆனால் நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. உதயநிதி ஸ்டாலினை காக்கா பிடிக்க செந்தில் பாலாஜி தெருக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரை வைத்து வருகிறார்.

உதயநிதி நாட்டுக்கு என்ன செய்தார் ? நயன்தாராவை கட்டிப்பிடித்தும், ஹன்சிகாவை காதல் செய்ததையும் மட்டும் தான் செய்தார் என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

கலை.ரா

அப்பாக்களைக் காக்கும் மகள்கள்: சட்டப் போராட்டத்தில் ஜெயித்த கேரள சிறுமி!

என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை: இதுவரை 8 பேர் கைது!

+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *