மோதல் தடுப்பு கருவி எங்கே?: நேரடியாகவே ரயில்வே அமைச்சரிடம் கேட்ட மம்தா

அரசியல்

ஒடிசா ரயில் விபத்து இந்த நூற்றாண்டின் கோர விபத்து என்று கூறியுள்ள மம்தா பானர்ஜி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை அருகில் வைத்துக்கொண்டே அவரை சாடியுள்ளார்.

ஒடிசாவில் கோரமண்டல் ரயில், யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா சென்ற ரயில் மற்றும் சரக்கு ரயில் நேற்று மாலை விபத்தில் சிக்கின. இந்த கோர விபத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தமிழகத்திலிருந்து அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒடிசாவில் விபத்து நடந்த இடத்துக்கு சென்றுள்ளனர். அதுபோன்று இன்று பிற்பகல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மற்றும் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் ரயில்வே அமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி,

“இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ரயில் விபத்து. இதற்கு பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய சரியான விசாரணை தேவை.

கோரமண்டல் ரயிலில் மோதல் தடுப்பு கருவி (anti-collusion device) இல்லை. ஒரே தண்டவாளத்தில் ஓடும் ரயில்களை குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்தும் வகையில் மோதல் தடுப்பு கருவியை அறிமுகப்படுத்தினேன்.

இப்போது நீங்கள் (அஸ்வினி வைஷ்ணவ்) இங்கே இருக்கிறீர்கள், உங்கள் முன், கோரமண்டல் ரயிலில் இந்த கருவி இல்லாததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏன் அந்த கருவி ரயிலில் இல்லை. இத்தகைய தொழில்நுட்பத்தை செயல்படுத்தியிருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம்.

ரயில்வே என்பது எனது குழந்தை மாதிரி, நான் ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்தவள். ரயில்வேக்கு நான் ஆலோசனை வழங்கத் தயார். இப்போதெல்லாம் ரயில்வே பட்ஜெட் சரியாக தாக்கல் செய்யப்படுவதில்லை” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து மத்திய அமைச்சருக்கும், மேற்கு வங்க முதல்வருக்கும் இடையே பலி எண்ணிக்கை குறித்து செய்தியாளர்களுக்கு முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “500 பேர் வரை இறந்திருக்கலாம். இன்னும் 3 பெட்டிகள் ஆய்வு செய்யப்படமால் இருக்கிறது” என்று கூற,

உடனடியாக பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “டிடி அனைத்து பெட்டிகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இறுதி இறப்பு எண்ணிக்கை 238 என மாநில அரசு உறுதி செய்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

அதை கேட்ட மம்தா பானர்ஜி, “மூன்று பெட்டிகளின் எண்ணிக்கை கணக்கில் வரவில்லை” என நம்பிக்கையில்லாமல் மீண்டும் தெரிவித்தார்.

1999ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராகப் பணியாற்றியவர் மம்தா பானர்ஜி.

2000ஆம் ஆண்டு முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மேற்கு வங்கத்துக்கு நிறைய புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்தினார். 2009ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் ரயில்வே அமைச்சராக இருந்தார்.

பிரியா

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கூட்டம்… முன்பே எச்சரித்த பயணிகள்- அலட்சிய ரயில்வே அமைச்சர்

ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

Where is the anti-collision tool
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *