ஷேக் ஹசினா எங்கே? இங்கிலாந்து செல்ல திட்டம்!

Published On:

| By Kavi

தற்போது இந்தியாவில் உள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இங்கிலாந்தில் தஞ்சம் அடைய அந்நாட்டு அரசிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அது வன்முறையாக மாறியுள்ளது.

தற்போது வரை 300க்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்த நிலையில், 76 வயதான 5 முறை பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் வங்கதேசத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கினார். காசியாபாத் டெல்லியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அங்கிருந்து அவரை ராணுவ வீரர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஷேக் ஹசீனாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

இந்த சூழலில் இங்கிலாந்து அரசிடம் சேக் ஹசீனா தஞ்சம் கோரி உள்ளதாகவும், அவரது சகோதரி ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்பதால் அவரோடு ஷேக் ஹசீனா லண்டனில் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வங்கதேசத்தில் வன்முறை ஏற்பட்டிருக்கும் நிலையில், அதை ஒட்டிய மாநிலமான மேற்கு வங்க மக்கள் அமைதியை நிலைநாட்டவும் எந்த வகையிலும் ஆத்திரமடைவதை தவிர்க்க வேண்டும் என்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே கொல்கத்தாவில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு இயக்கப்பட்டு வந்த டாக்கா – கொல்கத்தா நட்பு எக்ஸ்பிரஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

சி.வி.சண்முகத்தின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது: நீதிபதி ஜெயச்சந்திரன்

எங்கெங்கு கனமழை?: வானிலை அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share