முஸ்லிம், இந்து வார்த்தைகள் எங்கே இருக்கிறது? மோடியிடம் விவாதிக்க நேரம் கேட்ட காங்கிரஸ்!

Published On:

| By Kavi

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தொடர்பாக பேசியுள்ள பிரதமர் மோடியிடம் விவாதிக்க கார்கே நேரம் கேட்டுள்ளார் என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது,​​ தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று அக்கட்சி கூறியது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்” என்று பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு கூறியிருந்தார்.

பிரதமரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு எதிர்க்கட்சினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ இது வெறுக்கத்தக்க பேச்சு. முதல்கட்ட தேர்தலால் ஏற்பட்ட அச்சம் மற்றும் ஏமாற்றம் காரணமாக அவர் இவ்வாறு பேசுகிறார்.

மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தந்திரமாக சிந்தித்து இவ்வாறு பேசியிருக்கிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் மற்றும் இந்து என்ற வார்த்தைகள் குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “அதிகாரத்தைப் பெறுவதற்காக பொய்களைப் பேசுவதும், எதிர்க்கட்சி மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு ஆதாரமற்ற தகவல்களை சொல்வதும் பாஜகவுக்கு கைவந்த கலை.

இந்த பொய்களால் நாட்டில் 140 கோடி மக்கள் ஏமாறமாட்டார்கள். ஒவ்வொரு இந்தியருக்குமான நீதி மற்றும் சமத்துவம் பற்றி பேசுவதுதான் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை” என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி பிரதமரிடம் விவாதிக்க காங்கிரஸ் தலைவர் கார்கே நேரம் கேட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது, ஆனால் நரேந்திர மோடி நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை… எல்லாம் நன்றாக இருக்கிறது என்பது போல பேசிக்கொண்டிருக்கிறார்.

பிரச்சினைகளை திசைதிருப்ப முயற்சிக்கிறார். ஆனால் பொய் வியாபாரத்தின் முடிவு நெருங்கிவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

#13YearsOfKO: சிம்புவின் காஸ்ட்லி மிஸ்… ‘என்னமோ ஏதோ’ன்னு 13 வருஷம் ஓடிப்போச்சு!

“மக்களிடம் மதரீதியான குழப்பங்களை ஏற்படுத்தும் பாஜக”: முத்தரசன் தாக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share