நாடாளுமன்ற தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது.
இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் அனைத்து வகையான பிரச்சாரமும் முடிவடைகிறது.
இதனையடுத்து தமிழகத்தின் அனைத்துக்கட்சி தலைவர்களும் பல்வேறு இடங்களில் தங்களது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் – பெசன்ட் நகர், சென்னை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி – சேலம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் – சிதம்பரம்
பாஜக தலைவர் அண்ணாமலை – கோவை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் – விழுப்புரம்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் – உசிலம்பட்டி, தேனி
தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் – விருதுநகர்
முன்னாள் முதலமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் – ராமநாதபுரம்
பாமக தலைவர் அன்புமணி – குமாரசாமிபேட்டை, தருமபுரி
என தலைவர்கள் அத்தனைபேரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
வாக்குப்பதிவு முடிவடைவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன்பாகவே, தேர்தல் பிரச்சாரத்தை நிறைவடைய செய்ய வேண்டும் என்பது தேர்தல் விதியாகும்.. எனவே, இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிகிறது.
தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக அதன்பின்னர் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எந்த கட்சிக்கு எத்தனை சீட்?..ஒவ்வொரு கட்சிகளின் வாக்கு சதவீதம்…40 தொகுதி சர்வே ரிசல்ட்!
அமேதியில் போட்டியா?: மௌனம் கலைத்த ராகுல் காந்தி