தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 100 ஏக்கர் பரப்பளவில் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், அந்நிலத்தின் உரிமையாளர்களை தேடி கண்டுபிடித்து அட்வான்ஸ் கொடுத்து வருகிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.
’விஜய் மக்கள் இயக்கத்தை’ அரசியல் கட்சியாக மாற்றி ’தமிழக வெற்றிக் கழகம்’ என அறிவித்த நடிகர் விஜய், இன்னும் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தவில்லை.
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் கட்சி கொடியை அறிவிக்க விஜய் முடிவு செய்துள்ளார்.
அதனால் தனது மாநாட்டுக்கான இடத்தை சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இடம் தேடி வந்தனர் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் விஜய்யின் ஆலோசகர்கள்.
கடைசியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பை பாஸ் சாலையில் உள்ள 29 பேருக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தனர்.
”இந்த நிலத்தை கொண்டுள்ள எல்லோருக்கும் அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டுவிடுங்கள், இல்லையென்றால் அதனை வைத்து ஆளுங்கட்சியினர் சதிவேலை செய்ய நேரிடும்”என விஜய் எச்சரித்துள்ளார்.
அதன்படி நஞ்சை நிலத்திற்கு ஏக்கருக்கு 15 ஆயிரமும், புஞ்சை நிலத்திற்கு ஏக்கருக்கு 10 ஆயிரமும் என வாடகை பேசி ஏக்கருக்கு 5 ஆயிரம் என அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமென்ட் போட்டு வருகின்றனர்.
நிலம் உரிமையாளர்கள் 29 பேரில் 24 பேரிடம் அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமென்ட் போடப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஐந்து பேருக்கு அட்வான்ஸ் கொடுக்கவில்லை, காரணம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல் தேடி வருகின்றனர் த.வெ.க நிர்வாகிகள்.
இதற்கிடையே, “மாநாடு பந்தலில் மருத்துவ வசதி, குடிநீர் வசதி, சாப்பாடு வசதிகள் இடம் பெறும் வகையிலும், மாணவர்கள் மாணவிகள் கணிசமாக வருவதால் கழிப்பறை வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும் என்று ஆலோசனைகள் கூறியுள்ளார்.
மாநாட்டுக்கு 234 சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மக்கள் இடம் பெற வேண்டும் குறிப்பாக பெண்கள் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு அன்பு கட்டளை இட்டுள்ளார் என்கிறார்கள் விஜய்யின் சீனியர் ரசிகர்கள்.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிடப்பில் போடப்படுகிறதா மதுரை மெட்ரோ ரயில் திட்டம்… உண்மை நிலை என்ன?
பியூட்டி டிப்ஸ்: உடல் எடையைக் குறைக்க உண்ணாவிரதம் இருப்பவரா நீங்கள்?
பௌர்ணமி: திருவண்ணாமலை சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவு!
ஹெல்த் டிப்ஸ்: எந்த வயதில், எத்தனை முட்டை சாப்பிடுவது நல்லது?