தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? – தேதியை அறிவித்த சபாநாயகர்

Published On:

| By Jegadeesh

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக இன்று(பிப்ரவரி 27 ) சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் , மார்ச் மாதம் 20ஆம் தேதி 2023 – 2024 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மார்ச் 20 ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடி, பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள் என தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மார்ச் 9 ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!