அதிமுக சார்பில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்த தேர்தல் பணிக்குழு ஈரோட்டில் முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 30) தேர்தல் பணிக்குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்குத் தொகுதித் தேர்தலில் திருப்புமுனை ஏற்படும். எங்களுக்கு வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
அதிமுக பொதுக்குழு வழக்கைப் பொறுத்தவரைக் கட்சி சார்பில் சரியான முறையில் எடுத்துச் செல்லப்படுகிறது. நீதித்துறை என்ன கேள்வி கேட்டதோ, அது பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. முழுமனதோடு வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்.
இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை வாக்குகள் பிரியும் என்ற எண்ணம் எடுபடாது.
வழக்கமாக எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இடைத்தேர்தல் வருகிறபோது அமைச்சர்கள் தேர்தல் களத்திற்கு வருவது வழக்கம்.
இது தேர்தல் களம், அமைதியோடு தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறோம். இப்போது விமர்சனம் எதுவும் செய்ய விரும்பவில்லை” என்றார்.
பிரியா
இரட்டை இலை கேட்ட எடப்பாடி : உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
காந்தியடிகள் நினைவு தினம்: ஆளுநர் முதல்வர் மரியாதை!