தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் இன்று (பிப்ரவரி 2) அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.
கட்சியை முறைப்படி டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிவு செய்ய விண்ணப்பித்திருக்கிறார்.
இதேநேரம் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரை அறிவித்ததோடு தனது நோக்கம் என்ன, தேர்தல் களத்துக்கு எப்போது வரப் போகிறேன் எனபதை பற்றியெல்லாம் விரிவான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விஜய் அறிக்கை வெளியானதும் தமிழ்நாடு முழுதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற கட்சியினர் பொது அமைப்பினர் தங்களது கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடே இன்று விஜய் பற்றியும், அவரது கட்சி பற்றியும் பேசிக் கொண்டிருக்கும்போது விஜய் எங்கே இருக்கிறார்.. என்ன செய்து கொண்டிருக்கிறார்?
விஜய் சென்னையை அடுத்த ஒரகடத்தில் தனது ஷூட்டிங்கில் இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும், ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ கோட் திரைப்பட படப்பிடிப்பில் இருக்கிறார் விஜய். அவருக்கு நெருக்கமான் அரசியல் தலைவர்கள் வாழ்த்து சொல்லத் தொடர்புகொள்ள முயன்றபோதுதான், விஜய் இன்று ஷூட்டிங்கில் இருப்பதே தெரியவந்திருக்கிறது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யாருக்கு எதிராக அரசியல் கட்சி? விஜய் பதில்!
இன்னொரு படம் தான்… அடுத்து முழு நேர அரசியல் : விஜய்
விஜய், ரஜினி, கமலஹாசன், போன்ற சினிமா பிரபலங்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்பதில்லை, செருப்பு தைத்தவரின மகன் ஆப்ரஹாம் லிங்கனைப் போலவோ அல்லது கழிப்பறை துப்புரவு செய்பவரோ யாரும் அரசியலுக்கு வரலாம், ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்கு ஆதரவளிக்காதவன் தமிழினம் வஞ்சிக்கப்படுவதையும் நசுக்கப்படுவதையும் எதிர்த்து போராடாமல் எனக்கென்ன என்று ஒதுங்கியிருந்தவன் போன்ற துரோகிகள் அரசியலுக்கு வரக்கூடாது.