செங்கோல்: திருவாவடுதுறை ஆதீனம் தரும் விளக்கம்!

அரசியல்

நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் அடையாளம் என்பதை தெளிவாகத் தெரிவித்தார்கள் என்று திருவாவடுதுறை ஆதீனம் கூறியுள்ளார்.

”ஆகஸ்ட் 1947-இல் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என்பது உண்மை.

ஆனால், ஆங்கிலேயர்களிடம் இருந்த அதிகாரம் இந்தியாவுக்கு மாற்றப்படும் அடையாளமாக இந்த செங்கோல் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
மவுன்ட்பேட்டன், ராஜாஜி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் அவ்வாறு விவரித்ததாக ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை.

செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது பொய்யானது” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று (மே26)தெரிவித்திருந்தார்.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என்று கூறுவதன் மூலம் திருவாவடுதுறை ஆதீனத்தின் வரலாற்றை காங்கிரஸ் கட்சி நிராகரிக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் அடையாளம் என்பதை தெளிவாகத் தெரிவித்தார்கள் என்று திருவாவடுதுறை ஆதினம் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று(மே26) பேசிய அவர், “1947-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் முன்னாள் பிரதமர் ஜவகர்ஹலால் நேருவிடம் செங்கோல் தரப்பட்டது உண்மை.

ராஜாஜியின் அழைப்பை ஏற்று ஆதீனம் சடங்குகள் செய்ததற்கான பதிவுகள் உள்ளது. பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் அடையாளம் என்பதை தெளிவாகத் தெரிவித்தார்கள்.

நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆதீனத்தின் புத்தகத்தில் உள்ளது. 75 ஆண்டுகள் கண்ணாடிப் பெட்டியில் இருந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக சடங்குகள், நிகழ்வுகள்பொய், போலி என கூறுவது வருத்தம் அளிக்கிறது. ஒரு அரசு, நீதி மாறாமல் இருக்க செங்கோல் தரப்படுகிறது” என்றார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஜப்பான் – தமிழ்நாடு கெமிஸ்ட்ரி: ஒசாகாவில் ஸ்டாலின்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நிரந்தர தலைமை நீதிபதி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *