இந்தியா கூட்டணி கூட்டத்தில் விவாதித்தது என்ன?: சரத் பவார் பேட்டி!

Published On:

| By Kavi

இந்தியா கூட்டணி கூட்டத்தில் விவாதித்தது பற்றி  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி அளித்துள்ளார்.

இந்தியா கூட்டணியின் 5ஆவது ஆலோசனை கூட்டம் இன்று (ஜனவரி 13) காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், திமுக எம்.பி.கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஒருங்கிணைப்பாளராக பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை ஏற்க அவர் மறுத்துள்ளார்.

இந்த கூட்டத்துக்கு பின் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இந்தியா கூட்டணிக் கூட்டம் நடைபெற்றது. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இந்த கூட்டணி அமைய வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்ததையடுத்து அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

வரும் நாட்களில் திட்டங்களை வகுப்பதற்காக ஒரு குழுவையும் அமைத்துள்ளோம்.

ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமார் பொறுப்பேற்க வேண்டும் என்று அனைவரும் பரிந்துரைத்தனர். ஆனால் ஏற்கனவே பொறுப்பில் உள்ளவரே தொடரட்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்” என்று கூறினார்.

இன்றைய கூட்டம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா கூட்டணி கூட்டத்தில் பயனுள்ள வகையில் விவாதம் நடைபெற்றது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருவதால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் நாட்களில் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டுத் திட்டங்கள் குறித்தும் விவாதித்தோம். ‘பாரத் ஜோடோ நியாய யாத்ரா’வில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? – ஸ்டாலின் பதில்!

டைட்டில் வின்னர் இந்த போட்டியாளரா?… பிக்பாஸ் கொடுத்த க்ளூ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share