what really happened 1956 annadurai muthuramalingam

அண்ணா-தேவர்: அண்ணாமலை சொன்னது பொய்- ‘தி இந்து’ ஆதாரங்களோடு விளக்கம்!

அரசியல்

மதுரையில் 1956-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் சங்கம் மாநாட்டில் பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் முத்துராமலிங்க தேவரிடம் முன்னாள் முதல்வர் அண்ணா மன்னிப்பு கேட்டுவிட்டு மதுரையை விட்டு ஓடிப்போனதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசியிருந்தார். இந்த செய்திக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும்,   ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் அண்ணா மன்னிப்பு கேட்டுவிட்டு மதுரையை விட்டு ஓடிப்போனதாக செய்திகள் எதுவும்  தங்களது நாளிதழில் வெளியாகவில்லை என்று  ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் இன்று (செப்டம்பர் 21) செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரை தமிழ் சங்கம் நிகழ்ச்சி குறித்து,  ’தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், “1956-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ் சங்கம் மாநாடு நடைபெற்றது. நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான பி.டி.ராஜன் நிகழ்ச்சியின் தலைவராக இருந்தார்.

மே 30-ஆம் தேதி தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்த முன்னாள் முதல்வர்  ராஜகோபாலச்சாரி (ராஜாஜி) பேசும்போது, ‘தமிழ் சங்கத்தின் பொது நோக்கத்திற்காக உழைக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழ் மொழி, இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். சாதி வகுப்புவாத வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும். ஆரியர்களும் திராவிடர்களும் இரு வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்பது எனது மாணவ பருவங்களில் கற்பிக்கப்பட்டது. மாணவ பருவங்களில் படித்த புத்தகங்கள் பழங்கால அர்த்தமற்ற புத்தகங்கள். துரதிர்ஷ்டவசமாக சிலர் அந்த யோசனைகளை உறுதியாக பிடித்துக்கொண்டு தவறான வழிகளில் செல்கிறார்கள்’ என்று பேசியுள்ளார். இதுகுறித்த செய்தி மே 31-ஆம் தேதி தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ளது.

1956-ஆம் ஆண்டு மே 31 முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை வெளியான தி இந்து பத்திரிகைகளை ஆய்வு செய்தபோது, மதுரை தமிழ் சங்கத்தின் பொன் விழா கொண்டாட்டத்தின் நான்காவது நாளில் (ஜூன் 2) முத்துராமலிங்க தேவர் அண்ணாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார் என்ற செய்தி மட்டுமே வெளியாகியுள்ளது. ஆனால் 1956-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி முத்துராமலிங்க தேவரிடம்  அண்ணா வருத்தமோ மன்னிப்போ கேட்டதாக எந்த செய்திக் குறிப்பும்  ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியாகவில்லை.

வகுப்புவாத அமைப்புகளின் தலைவர்கள் பேசுவதற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வளாகத்தில் மேடை அமைத்து கொடுத்ததாக தமிழ் சங்கத்தின் விழா ஏற்பாட்டாளர்களை முத்துராமலிங்க தேவர் கடுமையாக கண்டித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மீனாட்சி அம்மன் கோவில் கொண்டாட்டத்தின் மூன்றாம் நாள் ஜூன் 1-ஆம் தேதி அண்ணா கூறிய ‘நாத்திக அறிக்கைகளை’ தேவர் குறிப்பிட்டு பேசியுள்ளார். அண்ணா உரையின் உள்ளடக்கத்தை விவரிக்காமல் அந்த செய்தி வெளியாகி உள்ளது.

அதற்கு முந்தைய நாள் மே 31-ஆம் தேதி அண்ணா ‘பொது பேச்சு’ என்ற தலைப்பில் பேசினார். அந்த நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை, அவ்வை துரைசாமி ஆகியோர் மேடையில் இருந்தனர். அவர்கள் ‘தமிழ் கலாச்சாரம்’ ‘பண்டைய தமிழர்களின் மதம்’ என்ற தலைப்பில் பேசினர்.

ஜூன் 4-ஆம் தேதி வெளியான செய்தியில், ‘அண்ணாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேவர் எழுந்து தன்னை பேச அனுமதிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்களை வற்புறுத்தியுள்ளார். அவரை விழா ஏற்பாட்டாளர்கள் பேச அனுமதிக்காததால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏறபட்டது. பின்னர் விழா ஏற்பாட்டாளர்கள் முத்துராமலிங்க தேவரை பேச அனுமதித்தனர். முத்துராமலிங்க தேவர் பேசிவிட்டு  மேடையை விட்டு வெளியேறினார். எந்த அசம்பாவிதமும் இன்றி கூட்டம் நடந்தது’ என்று அன்றைய தி இந்து ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியபோது, முத்துராமலிங்க தேவரிடம் அண்ணா மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார். இதற்கான ஆதாரங்கள் இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ளது என்றார். அதுபோன்ற செய்திகள்  நாளிதழில் பதிவாகவில்லை என்று,  ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

செல்வம்

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

காவிரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
1
+1
0
+1
0

2 thoughts on “அண்ணா-தேவர்: அண்ணாமலை சொன்னது பொய்- ‘தி இந்து’ ஆதாரங்களோடு விளக்கம்!

  1. நீங்க எல்லாரும் பொய் சொல்றீங்ணா, எங்க அண்ணாமலைஜி மட்டும்தான்னா உலக மகா யோக்கியரு, அவரு எப்பவும் உண்மையைத்தான்னா பேசுவாரு, நீங்கதான் போங்கு..,

  2. Annamalai like Late Raj Narain Court jester in TN politics. BJP high command will remove him from the post anytime for his impulsive outbursts in public platforms.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *