ஆறு நாட்கள் என்ன செய்தார் ஸ்டாலின்?

Published On:

| By christopher

what mkstalin did for the last six days

முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த நவம்பர் நான்காம் தேதி காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால், காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்று, சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்திருந்தார்‌. what mkstalin did for the last six days

அதன்படியே முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆறு நாட்களாக ஓய்வெடுத்து வந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த சென்னை சுற்றுப்புற மாவட்டங்களுக்கான திமுக பாக பொறுப்பாளர்கள் மாநாட்டில் கூட ஸ்டாலினுடைய உரையை அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தான் வாசித்தார். அந்த கூட்டத்தில் கூட காணொளி வழியாக வந்து தான் பொறுப்பாளர்கள் மாநாட்டிற்கு வர இயலாத சூழலை தெரிவித்தார் ஸ்டாலின்.

what mkstalin did for the last six days

இவ்வாறு ஆறு நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று நவம்பர் 10ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை அடுத்த கட்ட தொடக்க விழாவில் சென்னையில் பங்கேற்கிறார் ஸ்டாலின்.

கட்சிப்பணியோ அரசு பணியோ ஒரு நாள் கூட இடைவெளி விடாத முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆறு நாட்கள் என்ன செய்தார் என்பது குறித்த எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் எழுந்தது.

இது குறித்து முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, “முதலமைச்சர் ஸ்டாலின் தொடர் பயணங்கள் மேற்கொண்டதால்… தட்பவெப்ப தாக்கம் ஏற்பட்டு அவருக்கு காய்ச்சல் வந்தது.

முதல்வரின் தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் இந்த முறை நான்கு ஐந்து நாட்களாவது கட்டாயம் ஓய்வில் இருங்கள் என்று உரிமையோடு வற்புறுத்தினார்.

ஆனாலும் முதலமைச்சர் வீட்டில் இருந்தபடியே அமைச்சர்களை தொடர்பு கொண்டு அவர்களின் பணிகள் குறித்து தொடர்ந்து விசாரித்து அறிந்தார்.

குறிப்பாக தீபாவளி பண்டிகை சமயத்தில் வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கான சிறப்பு பேருந்து வசதிகள், பட்டாசு கடைகள் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி தொடர்ந்து முதலமைச்சர் அமைச்சர்களிடம் கேட்டறிந்து சில அறிவுரைகளையும் வழங்கினார்.

அமைச்சர் உதயநிதியிடம் திருவள்ளூர் பாக பொறுப்பாளர் மாநாடு எவ்வாறு இருந்தது என்று விசாரித்து அறிந்தார்.

முதலமைச்சரின் மருமகள் கிருத்திகா உதயநிதி… சில நல்ல திரைப்படங்களை பரிந்துரைத்து ”கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இதை பாருங்க” என்று சொன்னதால்… சில திரைப்படங்களை பார்த்தார் ஸ்டாலின்.

what mkstalin did for the last six days

ஆறு நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த ஸ்டாலின், இன்று மருத்துவர்கள் அறிவுரையோடு மகளிர் உரிமைத்தொகை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்” என்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாலின் ஆற்ற இருக்கும் உரை எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. what mkstalin did for the last six days

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆரா

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

தூங்கும் முன் இந்த விஷயங்களை மறந்துகூட செய்யாதீர்கள்!

67 தமிழக மீனவர்களில் 42 பேர் விடுதலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share