கெஜ்ரிவால் ஃபார்முலாவை கையிலெடுத்த மோடி… ஆம் ஆத்மி தோல்விக்கு என்ன காரணம்?

Published On:

| By Kavi

What is the reason for AAP's defeat

கடந்த 2013ல் மகா கும்பமேளா நடந்தபோது, டெல்லியில் காங்கிரஸை தூக்கி எறிந்து ஆம் ஆத்மி ஆட்சியில் அமர்ந்தது. What is the reason for AAP’s defeat?

ஷீலா தீட்சித்தின் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.

இந்த பத்து ஆண்டுகாலம் வேகமாக நகர்ந்து, இப்போது மீண்டும் கும்பமேளா நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வென்றிருக்கிறது.

2013ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்தபோதிலும் 48 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால். அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஒரு அமைப்பை உருவாக்கும் ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் 2015ல் நடைபெற்றத் தேர்தலில் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. மீண்டும் முதல்வரானார் அரவிந்த் கெஜ்ரிவால். 2020ல் நடந்த தேர்தலிலும் 62 இடங்களில் வெற்றி பெற்று முதல்வரானார்.

இருமுறை அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தும், இந்த முறை தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம்? What is the reason for AAP’s defeat?

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்…

What is the reason for AAP's defeat

இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோதும், டெல்லியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தோல்வி மற்றும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி ஆகியவை ஆம் ஆத்மியின் தோல்விக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. What is the reason for AAP’s defeat?

‘டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து’ என்ற வாக்குறுதியைப் போலவே, அனைவருக்கும் குழாய் நீர் இணைப்பு வழங்கப்படும். பாரிசுக்கு இணையாக யமுனை நதி சுத்தம் செய்யப்படும். 20 லட்சம் வேலைவாய்ப்புகள் என பல கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்தது ஆம் ஆத்மி. ஆனால் அவை பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. இது ஆட்சிக்கு எதிரான உணர்வை மக்களிடத்தில் தூண்டியது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். What is the reason for AAP’s defeat?

பாஜகவின் பிரச்சார உத்தி! What is the reason for AAP’s defeat?

What is the reason for AAP's defeat

காங்கிரஸை எதிர்த்ததைக் காட்டிலும் பாஜக ஆம் ஆத்மியை எதிர்த்தே அதிக பிரச்சாரம் செய்தது. காற்று மாசுபாடு, போக்குவரத்து நெரிசல், நகர்ப்புற வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுப் பாதுகாப்பு போன்ற டெல்லி மக்களை நேரடியாகப் பாதிக்கும் ஹைப்பர்-லோக்கல் பிரச்சினைகளில் பாஜக கவனம் செலுத்தியது. What is the reason for AAP’s defeat?

டெல்லியின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தை கொண்ட பூர்வாஞ்சலி சமூகத்தின் வாக்குகளை குறிவைத்து பாஜக தேர்தல் பணிகளை செய்தது. இது பாஜகவின் வெற்றிக்கும், ஆம் ஆத்மியின் தோல்விக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. குடிசைவாசிகளின் வாக்குகள் மீதும் பாஜக கவனம் செலுத்தியது.

அந்தவகையில் தேர்தலுக்கு முன்னதாக, நகரத்தில் ஜேஜே கிளஸ்டர்களில் வசிப்பவர்களுக்கான 1,675 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் இரண்டு நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

ஊழல் குற்றச்சாட்டுகள்! What is the reason for AAP’s defeat?

What is the reason for AAP's defeat

2013ல் ஆட்சிக்கு வர காங்கிரஸை வீழ்த்தி ஆம் ஆத்மி என்ன உத்தியை பயன்படுத்தியதோ, அதையே தற்போது பாஜக ஆம் ஆத்மிக்கு எதிராக செய்திருக்கிறது.

2013ல் கெஜ்ரிவால், யுபிஏ கால ஊழல்கள் மற்றும் காங்கிரஸின் வீழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்த நிர்பயா வழக்கு ஆகியவற்றைக் குறிப்பிட்டு பிரச்சாரம் செய்தார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கெஜ்ரிவால் பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, சிறைக்கும் சென்று வந்திருக்கிறார். What is the reason for AAP’s defeat?

கெஜ்ரிவால் மட்டுமல்ல டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் சிபிஐ, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டனர். இது ஆம் ஆத்மியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியது.

அதோடு அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் உள்கட்டமைப்புக்காகவும், மக்களுக்காகவும் எதுவும் செய்யவில்லை. மாறாக தன்னுடைய வீட்டை ஷீஷ் மகால் போல், அதாவது கண்ணாடி அரண்மனை போல் மாற்றியிருக்கிறார். சுமார் 40 கோடிக்கு தனது வீட்டுக்குள்ளேயே அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார் என்று குற்றம்சாட்டியது பாஜக. உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி மாநில பாஜக தலைவர் வரை பலரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஏன்… காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இதையே சுட்டிக்காட்டி ஆம் ஆத்மிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இது கெஜ்ரிவால் மீது இருந்த நம்பிக்கையை மக்களிடையே குறையச் செய்துள்ளது.

பட்ஜெட் அறிவிப்பு! What is the reason for AAP’s defeat?

டெல்லி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, வெளியான மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வாக்காளர்களை கவரும் வகையில் வருமான வரிச் சலுகையை பாஜக அரசு அறிவித்தது. ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது தனது உரையில் அடிக்கடி இதை சுட்டிக்காட்டி பேசினார். மிகவும் நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட் என்று அவர் கூறியது ஆம் ஆத்மியின் வீழ்ச்சிக்கும், பாஜகவின் வெற்றிக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது.

காங்கிரஸ் vs ஆம் ஆத்மி What is the reason for AAP’s defeat?

இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் மாநில சட்டப்பேரவையில் தனி தனியே போட்டியிட்டு ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தற்போது சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்பதையே டெல்லி தேர்தல் முடிவுகள் காட்டுவதாக இக்கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மி மீது நம்பிக்கையை இழந்ததால் முக்கிய எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்ததும், ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இருப்பது குறித்து முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து பேசியதும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி தோல்விக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

What is the reason for AAP’s defeatWht is the reason for AAP’s defeat

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share