முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுர தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. What is the OPS competing Symbol?
இந்த நிலையில் அவர் ஜல்லிக்கட்டு காளை, சேவல், தொப்பி ஆகிய ஏதேனும் ஒரு சின்னத்தை தனக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு ஓபிஎஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என்று அவரது ஆதரவாளரான புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.
இந்த சூழலில், மார்ச் 21ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், “இரட்டை இலை சின்னத்தை பெறுவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். வழக்குகள் நிலுவையில் இருக்கும் நேரத்தில் மக்களவைத் தேர்தல் வந்துவிட்டது. இதில் போட்டியிடுவதற்கு 15க்கும் அதிகமான தொகுதிகளை பாஜகவிடம் கேட்டிருந்தோம்.
ஆனால் சின்னம் பெறுவதில் காலதாமதம் ஏற்படும் நிலையில் தொண்டர்களின் பலத்தை காட்டுவதற்கு ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் முதன்முறையாக எம்பி தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் களம் காண்கிறார்.
அவர் போட்டியிடும் தொகுதியான ராமநாதபுரத்தில் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நவாஸ் கனி, அதிமுக சார்பில் ஜெயப்பெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில் திமுக கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. நேற்று நவாஸ் கனியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த சூழலில், பன்னீர்செல்வத்தின் தேர்தல் பணிகள் மற்றும் பிரச்சாரம் தொடர்பாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்.
“ஓபிஎஸ்-க்கு வாக்கு சேகரிப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் பலரும் ராமநாதபுரத்துக்கு செல்கிறார்கள். அவர்கள் முழுமையாக ராமநாதபுரத்தில் மட்டும் வாக்கு சேகரிக்க உள்ளனர். பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கு செல்ல மாட்டார்கள்.
ராமநாதபுரத்தில் முக்குலத்தோர் சமுதாய உட்பிரிவுகளான அகமுடையார் மற்றும் மறவர் சமுதாய ஓட்டுகள் அதிகம் உள்ளது. அதனால் ஓபிஎஸ் அந்த தொகுதியில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்” என்றார்கள் ஓபிஎஸ் வட்டாரத்தில்.
அவர்களிடம் ஓபிஎஸ் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்று கேட்டதற்கு,
“இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாடி இருக்கிறார். தற்போது ஜல்லிக்கட்டு காளை, சேவல் அல்லது தொப்பி ஆகிய ஏதேனும் ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு கேட்டு இருக்கிறார்” என்கிறார்கள்.
வேந்தன், பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: ஃபிரிட்ஜ்… எந்தப் பொருளை, எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்?
KKR Vs SRH: மொகத்துக்கு நேரா ‘இப்படி’ பண்ணிட்டாரே… வைரலாகும் ‘கத்துக்குட்டி’ வீரரின் செயல்!
SRH vs KKR: இப்டித்தான் எங்களுக்கும் இருந்துச்சு… கம்மின்சை ‘சைலண்ட்’ ஆக்கிய ஷாரூக் டீம்!
வேடந்தாங்கல் பறவை கூட்டணி: அப்டேட் குமாரு