ஸ்டாலின் தொகுதியே இப்படியா? – மினி தொடர் – 12

அரசியல் சிறப்புக் கட்டுரை

திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 12

– ஆரா

திமுக தலைவர் ஸ்டாலினுடைய கொளத்தூர் தொகுதியில் கட்சியின் பூத் கமிட்டி குழு ஆய்வு மேற்கொள்ளச் சென்றது.

அப்போது டெங்கு பீதி எங்கும் இருந்தபடியால் ஸ்டாலின் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தினந்தோறும் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கஷாயத்தை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் ஆய்வு செய்ய வந்த பூத் கமிட்டியினருக்கும் நிலவேம்பு கஷாயத்தைக் கொடுத்தனர்.

இதைச் சொன்ன கொளத்தூர் உடன்பிறப்புகள் தொடர்ந்து சொன்னதைப் பார்ப்போம்.

“ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டி எப்படி இருக்கோ… ஆனா, தலைவர் தொகுதியில பூத் கமிட்டிய பக்காவா அமைச்சிருப்பாங்க. நமக்கு பெரிய வேலையிருக்காதுனு நினைச்சுக்கிட்டுதான் அந்த டீம் வந்திருப்பாங்க. ஆனா, அவங்களுக்குக் கிடைச்சது பெரிய அனுபவம்.

வந்தவுடனேயே பகுதிச் செயலாளர்கள்கிட்ட, பூத் கமிட்டி விவரங்களை எல்லாம் தலைமை அனுப்பின டீம் கேட்டிருக்கு. அதுக்கு, பகுதிச் செயலாளர்கள் என்ன சொன்னாங்க தெரியுமா?

‘அண்ணா இங்க எல்லாமே ஓஎம்ஜி தான்னா. அவங்கதான் பூத் கமிட்டிக்காக போட்டோவோட ஃபார்ம்லாம் சேகரிச்சு வச்சிருக்காங்க’ என்று பகுதிச் செயலாளர்கள் கூறிவிட, அடுத்து பூத் கமிட்டி டீம், ஓஎம்ஜி டீமிடம், ‘சார்… பூத் கமிட்டி விவரங்களை எடுத்துட்டு வாங்களேன்’ என்று கேட்டிருக்காங்க.

அதை ஓஎம்ஜியும் கொடுத்திருக்காங்க. ஒவ்வொரு பெயர், ஆதார் கார்டு, போட்டோ என ஒரு ஃபைல் இருந்தது. அதாவது ஒவ்வொரு பூத்துக்கு இருபது பெயருடைய போட்டோ ஒட்டி வெச்சிருந்தாங்க. பூத் கமிட்டி வழக்கம்போல அதுல ஒரு போன் நம்பருக்கு போன் போடச் சொல்லியிருக்காங்க” என்று கூறி நிறுத்தினார்கள் அந்த உடன்பிறப்புகள்.

அப்புறம் நடந்தது என்ன?

பூத் கமிட்டி சார்பில் அந்தப் பட்டியலில் இருந்த ஒரு நம்பருக்கு போன் போட்டிருக்கிறார்கள்.

“சார்… நீங்க கொளத்தூர்… இந்த பூத் கமிட்டியில இருக்கீங்களா?”

மறுமுனை சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ந்துபோன பூத் கமிட்டி டீம் பகுதிச் செயலாளர்களிடம், “என்ன சார் ராங் நம்பரா?” எனக் கேட்டிருக்கிறார்கள்.

What is Happening in DMK Mini Series 12

அதற்கு அடுத்து பகுதிச் செயலாளருக்கு அருகே இருந்த ஏரியாவின் முக்கியமான லோக்கல் உடன்பிறப்பு தன் போனில் இருந்து அந்த நம்பருக்குப் போன் போட்டிருக்கிறார்.,

“ஹலோ நான் …… பேசுறேன்… நீங்க திமுக பூத் கமிட்டியில இருக்கீங்கள்ல” என்று கேட்டிருக்கிறார்.

“என்னண்ணே… அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே? என்ன திடீர்னு கேக்கறீங்க?”

இந்த பதிலால் அதிர்ந்துபோன உடன்பிறப்பு, “உங்க போட்டோல்லாம் கொடுத்திருக்கீங்களே” என்று கேட்கிறார்.

“ஆமாண்ணே… எங்க ஏரியாவுல எல்லார்கிட்டேயும் போட்டோ வாங்கிட்டுப் போனாங்க. ஆனா, பூத் கமிட்டினு சொல்லலையேண்ணே… ஏதோ உதவி கொடுக்கப் போறாங்கனு வாங்கிட்டு போனாங்க.”

இந்தப் பதிலைக் கேட்டு பூத் கமிட்டி டீமிடம் என்ன சொல்வதன்றே தெரியவில்லை லோக்கல் பகுதிகளுக்கு.

“சார் இது தலைவர் தொகுதி. இங்க எல்லாமே ஓஎம்ஜிதான். பகுதி, வட்டம் எல்லாமே அவங்க சொல்றதை செய்யறதுக்குதான். பூத் கமிட்டி பத்தி அவங்களே பாத்துக்கறேன்னு சொன்னதால யாரும் தலையிடல. மாவட்டச் செயலாளருக்கும் இதெல்லாம் தெரியும்” என்றனர்.

“கட்சியின் ரத்த ஓட்டமான கீழ் நிலை நிர்வாகிகளுக்குத் தெரியாமல், ஏன் அந்த பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கே தெரியாமல் பூத் கமிட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது, அதுவும் தலைவரின் தொகுதியில். இந்த அணுகுமுறையில் மாற்றம் வராமல் வேறு எந்த மாற்றமும் வராது”

கழகத்தின் கடைநிலைத் தொண்டனின் இந்தக் கருத்தில் கவனம் கொள்ளாவிட்டால் பூத் கமிட்டி காய்க்காது, பழுக்காது.

(பயணிப்போம்)

முந்தைய பகுதிகள்

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 6]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 7]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 8]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 9]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 10]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 11]

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *