அண்ணாமலையை வைத்துக் கொண்டு அமித் ஷா பேசியது என்ன? போட்டு உடைத்த  சி.வி. சண்முகம் 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பற்றி கூறிய வார்த்தைகள்  அதிமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி டெல்லியில் அமித் ஷா- எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது அண்ணாமலையை வைத்துக் கொண்டு, அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்த கருத்துகளை இப்போது அண்ணாமலைக்கு நினைவூட்ட விரும்புவதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் எம்பியுமான சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

இன்று ( ஜூன் 13) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம், “நாங்கள் வளர்ந்துவிட்டோம் வளர்ந்துவிட்டோம்னு அண்ணாமலை சொல்கிறார். போங்க… உங்களை யாரு என்ன சொன்னோம்?  உங்களுடைய தேசிய தலைவர் ஜே.பி. நட்டா,  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் எங்கள் பொதுச் செயலாளரை வைத்துக் கொண்டு, இந்த அண்ணாமலையை வைத்துக் கொண்டு சொன்ன வார்த்தை என்ன?,

‘அதிமுகதான் தமிழ்நாட்டில் பெரிய கட்சி. அதன் தலைமையில் கூட்டணி தொடரும். இது பாரதப் பிரதமருடைய விருப்பம்’ என்று ஒருமுறை அல்ல இரு முறை சொன்னார்.

அது யாருக்காக சொன்ன வார்த்தை? எங்களுக்காக அல்ல. அண்ணாமலையை வைத்துக் கொண்டு அவர் தலையில் குட்டுவதுபோல சொன்ன வார்த்தை.

இன்று வீரமாக பேசும் அண்ணாமலை அன்று வீரம் இருந்திருந்தால், ஆண்மை இருந்திருந்தால்…அன்றைக்கு அமித் ஷாவும், நட்டாவும்  அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று சொன்னபோது அன்றைக்கு வாயை எங்கே வைத்துக் கொண்டிருந்தார்.

’இல்லை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன், அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன்’ என்று சொல்லியிருந்தால் நீ ஆம்பளை.

What did Amit Shah say about Annamalai?

இன்றைக்கு அண்ணாமலை ஏன் அப்படி பேசுகிறார் என்றால், தமிழகத்தில் திமுகவோடு பாஜக மறைமுகக் கூட்டணி வைத்துள்ளது. நான் கடலூர் பொதுக்கூட்டத்திலேயே இதுபற்றி கூறினேன்.

மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் அண்ணாமலைக்கு எண்ணமில்லை. அவரது எண்ணமெல்லாம் திமுகவின் கொள்கைகளை நிறைவேற்றுவதுதான்.

திமுகவின் ஏஜென்ட் ஆக, திமுகவின் பி டீம் ஆக  செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இரு நாட்களுக்கு முன் உதயநிதி சொன்னதை அண்ணாமலை வழிமொழிகிறார்.

உனக்குதான் அதிமுகவை பிடிக்கவில்லையே… போயேன், உன்னை யார் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார்?”  என்று ஆவேசமாகக்  கேட்டார் சி.வி. சண்முகம்.   

வேந்தன்

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம்!

மோடி அரசு மிரட்டியது : ட்விட்டர் முன்னாள் சிஇஓ!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts