அதிமுகவில் அவைத்தலைவரின் பணிகள் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கட்சி சார்பில் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார்.
அவர், தனது வாதத்தில், அவைத் தலைவர் தேவைப்படும்பொது எப்போதும் வேண்டுமானாலும் பொதுக்குழுவை கூட்டலாம். பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம் படைத்தது.
பொதுக்குழு முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பது விதி. அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் கட்சியை வழி நடத்த தலைமை வேண்டும்.
அந்த நேரத்தில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என இருவரிடையே ஈ.பி.எஸ் அதிக ஆதரவு பெற்றவராக இருந்தார்.
இருப்பினும் கட்சியின் நலனுக்காக இரட்டை தலைமை ஏற்படுத்தி இருவரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பொதுக்குழு மூலம் பதவிகள் உருவாக்கி கட்சியை வழி நடத்தினர்.
ஆனால் இரட்டை தலைமையால் கட்சியின் பல்வேறு முடிவுகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதன்படிதான் உரிய முறையில் பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக, அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார்.
கலை.ரா